முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரிக்காக 20,000 லட்டுகள் தயாரிப்பு

விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரிக்காக 20,000 லட்டுகள் தயாரிப்பு

X
லட்டு

லட்டு தயாரிக்கும் பணி

Villupuram News | விழுப்புரம் மாவட்டம் திருவிக வீதியில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே திரு.வி.க வீதியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி முன்னிட்டு 20,000 லட்டுகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவிக வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதியில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலின் மூலவராக சிவபெருமான் உள்ளார்.

நாளை மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இக்கோயிலின் பிரதோஷ பேரவை சார்பில், பிரதோஷ பேரவை அன்பர்களிடமிருந்தே பணம் வசூல் செய்து, நாளை சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

அதனையடுத்து, லட்டுக்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. லட்டுக்களை தயாரிக்கும் பணியில் பேரவையின் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு லட்டுகளை பிடித்து பெட்டிகளில் போட்டு வைக்கிறார்கள். மொத்தமாக 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலின சமத்துவம் பற்றி விழிப்புணர்வு

அதுமட்டுமல்லாமல் நாளை மகா சிவராத்திரி திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு 1,008 சங்கு பூஜைகள் நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Viluppuram S22p13