Home /viluppuram /

Villupuram : மணக்கும் மலர் சாகுபடி - நல்ல லாபம் கிடைக்கும் மகிழ்ச்சியில் மதுரபாக்கம் விவசாயிகள்..

Villupuram : மணக்கும் மலர் சாகுபடி - நல்ல லாபம் கிடைக்கும் மகிழ்ச்சியில் மதுரபாக்கம் விவசாயிகள்..

விழுப்புரம்

விழுப்புரம் மலர் சாகுபடி

Villupuram District: விழுப்புரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மதுரபாக்கம். இக்கிராமத்தை எங்கு சுற்றிப் பார்த்தாலும் ஒரே வண்ணமயமாக காணப்படுகிறது.

    விழுப்புரம் அடுத்த மதுரபாக்கத்தில் குண்டுமல்லி, சாமந்தி, கனகாம்பரம் போன்ற மலர்களை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். பருவம் இல்லாத காலங்களில் கூட பூக்களின் உற்பத்தி விவசாயிகளுக்கு அதிகளவில் லாபம் ஏற்படுத்தித் தரும். அந்தவகையில் குண்டு மல்லி  எந்தக் காலத்திலும் பயிரிடக்கூடிய ரகமாக உள்ளது.

    விழுப்புரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மதுரபாக்கம். இக்கிராமத்தை எங்கு சுற்றிப் பார்த்தாலும் ஒரே வண்ணமயமாக காணப்படுகிறது. என்னவென்று பார்த்தால் பல ரகத்திலான பல வகை பூக்கள் நம் கண்களில் தென்பட்டது.  இந்த கிராம மக்களின் பிரதான தொழிலாக மலர் விவசாயம்தான் விளங்குகிறது.

    அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்றாற்போல மலர்களை சாகுபடி செய்து பாண்டிச்சேரி, திண்டிவனம் போன்ற மார்கெட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் உள்ளூர் பகுதிகளிலும் விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் முகூர்த்த நாட்கள் அதிகம் இருந்ததால் மலர்களின் விலை உச்சத்தில் இருந்ததாகவும் தங்களுக்கு நல்ல  லாபம் கிடைத்ததாகவும், நேற்றுடன் முகூர்த்த நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பூக்களின் விலை சுமாராக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் முகூர்த்த நாட்களில் ஒரு கிலோ குண்டுமல்லி ஆயிரம் ரூபாய்க்கும், சாமந்தி ஒரு கிலோ 250 முதல் 300 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. இந்த விலைக்கு விற்பனையாளர்கள் எங்களுக்கு லாபம் இல்லை என்றால் நஷ்டம்தான் ஏற்படும். மேலும் நேற்று பெய்த கன மழையால், பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ குண்டு மல்லி 250 முதல் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    இந்த விலையில் விவசாயிகளுக்கு நஷ்டம் மட்டும்தான் லாபமில்லை முதலீடு செய்த பணம் முழுவதும் மருந்து உரத்திற்கு செலவாகி விடுகிறது.

    பூக்கள் விலை போகிறதோ அல்லது வீழ்ச்சியடைகிறதோ வந்த வரைக்கும் லாபம், பையில் வந்த பூக்களை பார்த்து எங்களுக்கு மகிழ்ச்சி தான் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி