Home /viluppuram /

பெரியார் பிறந்த நாளில் நூலகம் தொடங்கிய இளைஞர்கள்.. கீழ்பெரும்பாக்கத்தில் அசத்தல் முயற்சி..

பெரியார் பிறந்த நாளில் நூலகம் தொடங்கிய இளைஞர்கள்.. கீழ்பெரும்பாக்கத்தில் அசத்தல் முயற்சி..

விழுப்புரம்

விழுப்புரம் - கீழ்பெரும்பாக்கம் பெரியார் படிப்பகம்

Villupuram Keezhperumpakkam | விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியில் இளைஞர்களின் முயற்சியால்  தந்தை  பெரியாரின் பிறந்த நாளான இன்று  ‘பெரியார் படிப்பகம்’ நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியில் இளைஞர்களின் முயற்சியால் தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று ‘பெரியார் படிப்பகம்’ நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கத்தில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, பெரியாரின் பிறந்த நாளான இன்று சண்முக பெருமாள் தெருவில் நூலகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இளைஞர்கள் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கு சரியான பாதையை காட்ட வேண்டும் என்பதே இந்த படிப்பகம் ( நூலகம் ) தொடங்கப்பட்டுள்ளதன் நோக்கம் என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

இந்த நூலகம் குறித்து இதனை தொடங்கியுள்ள இளைஞர்கள் கூறுகையில், பெரியாரின் சிந்தனைகள், பெரியார் கூறிய வழிமுறைகள், சமூக சீர்கேட்டில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்டெடுத்தல், படிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற கருத்துக்களை கொண்டு சேர்ப்பது இந்த நூலகத்தின் நோக்கம் ஆகும்.

இதையும் படிங்க:  அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்கள், கட்டுரைகள், கவிதை புத்தகங்கள் பகுத்தறிவு புத்தகங்கள், தமிழ் இலக்கியம் சார்ந்த புத்தகங்கள், என மொத்தம் 1700 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு இல்லாத புத்தகங்களை கேட்டு வருவோருக்கும் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை ஏற்பாடு செய்து வாங்கித் தருவோம்.

இந்த பெரியார் படிப்பகம் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையும், அனைத்து தினங்களிலும் செயல்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இங்குள்ள புத்தகங்களை படித்து பயன் பெறலாம்.

இதையும் படிங்க:  விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு குட்நியூஸ் : ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தற்போது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மொபைல் ஃபோனுக்கு அடிமையாகி வருகின்றனர். அனைத்து விஷயங்களையும் உள்ளங்கையிலே தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். வரலாற்றை தெரியாமல் யாரும் வரலாறு படைக்க முடியாது என பெரியார் கூறியபடி அனைவரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டும், இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் சமமாக கல்வி சென்றால் மட்டுமே மாற்றம் ஏற்படும்.
அந்த முயற்சியில் தான் நாங்கள் இளைஞர்களாக சேர்ந்து இந்த படிப்பகத்தை ஆரம்பித்துள்ளோம். இந்த தந்தை பெரியார் படிப்பகத்திற்கு வருகை புரிந்து படிக்க விரும்புவோர், கீழ்பெரும்பாக்கம், 24, சண்முக பெருமாள் தெருவில் உள்ள இந்த நூலகத்துக்கு வரலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நூலகத்தை மேன்மேலும் வளர்த்து கொண்டு செல்வதற்கு உதவும் மனம் உடையவர்கள் புத்தகங்கள் வழங்கியும் அல்லது உதவித்தொகை மூலமாகவும் உதவலாம். உதவ நினைப்போர் 9488211218 எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவலாம் எனவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி