முகப்பு /விழுப்புரம் /

கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு.. விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சி!

கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு.. விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சி!

X
கோடை

கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு

Villupuram News | விழுப்புரம் சந்தைகளில் கோடை வெயிலின் தாக்கத்தால் விலை அதிகரித்துள்ள எலுமிச்சை பழங்கள்.

  • Last Updated :
  • Viluppuram, India

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலையில் அதிக உஷ்ணமும், இரவில் புழுக்கமும் தாங்க முடியாமல் மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். வெயிலின் உஷ்ணத்தில் இருந்து காத்துக் கொள்ள அதிக அளவில் குளிர்பானங்கள் மற்றும் பழங்களைக் நாடி செல்கின்றனர். அதுபோல கோடை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி குடிக்கும் கூல்டிரிங்ஸ் என்றால் அது லெமன் ஜூஸ் தான். கடைகளில் மட்டும் இல்லாமல் வீட்டிலேயே வெயில் காலத்தில் அதிக அளவில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வருகின்ற காரணத்தால் எலுமிச்சைக்கு சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.

இதனால் இதன் விலையும் அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை தற்போது ஒரு எலுமிச்சை 10 ரூபாயும், ஒரு கிலோ 100 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. ஒரு மூட்டையின் விலை ரூபாய் 3000 லிருந்து 4000 வரை விற்பனையாகிறது. சந்தைகளில் பொதுமக்கள் எலுமிச்சை பழங்களைத் தேடி தேடி வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் எலுமிச்சை பழத்திற்கு திடீரென மவுசு கூடியுள்ளது. இதனால் எலுமிச்சை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து எலுமிச்சை பழ வியாபாரி கூறுகையில்,

”நாங்கள் எம். ஜி ரோடு மார்க்கெட்டில் , எலுமிச்சை பழம் விற்பனை செய்து வருகிறோம். எனக்கு இன்னும் சில வியாபாரிகளுக்கு திருச்சியிலிருந்து எலுமிச்சை பழங்களை கொண்டு வந்து விழுப்புரத்தில் வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த மாதங்களை விட தற்போது எலுமிச்சம்பழம் வியாபாரம் நல்ல முறையில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் வேலை வாய்ப்பு!

2 அல்லது 3 ரூபாய்க்கு விற்பனையான எலுமிச்சை பழம் தற்போது 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு மூட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வாங்கிட்டு வருவோம் ஆனால் தற்போது மூட்டையின் விலை 3000 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரை விற்பனைக்கு போகிறது. பொதுமக்களும் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க, பழங்களை அதிக அளவில் வாங்குகின்றனர். அதில் முக்கியமாக எலுமிச்சை பழங்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் இதனால் எங்களுக்கு வியாபாரம் நல்ல முறையில் போகிறது” என மகிழ்ச்சியுடன் கூறினார் வியாபாரி.

First published:

Tags: Local News, Villupuram