ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை மீண்டும் திறப்பு - தாய்மார்கள் மகிழ்ச்சி..

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை மீண்டும் திறப்பு - தாய்மார்கள் மகிழ்ச்சி..

விழுப்புரம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை

Villupuram Bus Stand | விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை  மீண்டும் பயன்பாட்டிற்கு வந்திருப்பதற்கு தாய்மார்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையானது கடந்த சில நாட்களாக மூடிய நிலையில் இருந்தது. தற்போது அந்த அறை, மீண்டும் திறக்கப்பட்டு தாய்மார்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது . இருப்பினும்  பாலூட்டும் அறையில் உள்ள கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்றும், குடிப்பதற்காக வைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் காட்சி பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு தாய்மார்கள் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலூட்டும் தாய்மார்கள் நலன் கருதி பேருந்து நிலையங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி அறை கட்டப்படும் என கடந்த 2015ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திருச்சி, கடலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்தில் பாலூட்டும் தனி அறை கட்டப்பட்டது.

அதில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, தாய்மார்கள் அமருமிடம் உட்பட அனைத்து வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட தனி அறை வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க:  தேவார பாடல் பெற்ற கடைசி சிவன் தலம் - விழுப்புரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா.!

தாய்மார்கள் பாலூட்டும் அறை குறித்து தாய்மார்கள் கூறியதாவது,

விழுப்புரம் பேருந்து நிலையம் எப்போதுமே பொது மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் நிலையில் அவசரத்திற்கு குழந்தைக்கு பொது வெளியில்தான் பாலூட்டி வந்தோம்.

அப்போது முகம் சுளிக்கும் அளவுக்கு எங்களுக்கு கூச்சமாக இருந்தது. இந்த அறையை திறப்பதற்கு பல முறை கோரிக்கை விடுத்து அதன்பின் சில தினங்களாக இந்த பாலூட்டும் அறை திறந்த நிலையில் உள்ளது. எங்களுக்கு தற்போது ஏற்ற வசதியுடன் சுத்தமாகவும் இந்த அறை உள்ளது.குழந்தைகளுக்குப் பாலூட்டுவது குழந்தைகளுக்கு தூங்க வைப்பது போன்ற அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த அறையில் உள்ள கழிவறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் இயந்திரம் செயல்படாமல் காட்சி பொருளாக இருக்கிறது, இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தாய்மார்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram