Home /viluppuram /

கிருஷ்ணரை கண்முன்னே நிறுத்திய சிறுவர்கள்.. மாறுவேட போட்டியில் கலக்கிய விழுப்புரம் குட்டிசுட்டீஸ்.. 

கிருஷ்ணரை கண்முன்னே நிறுத்திய சிறுவர்கள்.. மாறுவேட போட்டியில் கலக்கிய விழுப்புரம் குட்டிசுட்டீஸ்.. 

விழுப்புரம்

விழுப்புரம் - கிருஷ்ண ஜெயந்தி

Krishna Jayanthi : விழுப்புரம் அருகே சங்கரமடம் சங்கரா ஹாலில் விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம் சார்பாக ஸ்ரீ ராதா கிருஷ்ணா மாறுவேட போட்டி நடந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் சங்கரமடம் சங்கரா ஹாலில் விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம் சார்பாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக சிறுவர்-சிறுமிகள் கிருஷ்ணர் ராதா ஆண்டாள் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து கிருஷ்ணஜெயந்தி கொண்டாடினர்.

விழுப்புரம் அருகே சங்கரமடம் சங்கரா ஹாலில் விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம் சார்பாக ஸ்ரீ ராதா கிருஷ்ணா மாறுவேட போட்டி நடந்தது. இதில் விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் ஒரு வயது முதல் 10 வயது நிரம்பிய 50 சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதலிடத்தைப் பெறுபவருக்கு ஆயிரம் ரூபாயும் இரண்டாமிடம் பெறுபவருக்கு 800 ரூபாயும் மூன்றாம் இடத்தை பிடிப்பவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:  தனியார் பள்ளியை மிஞ்சும் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி.. புதிய மாற்றங்களால் நெகிழும் மாணவர்கள்..

இப்போட்டியில் கிருஷ்ணனின் பல்வேறு அவதாரங்கள், ராதை, ஆண்டாள் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து குழந்தைகள் அழகாய் வருகை புரிந்தனர். கண்ணை பறிக்கும் அளவிற்கு குழந்தைகள் அழகாய் வேடமணிந்து, கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட பாடல்கள், கதைகள், கவிதைகள் என தங்களுடைய திறமைகளை வெளிக் காட்டினார்.

உடல் முழுவதும் நீல நிறத்திலும், தலையில் மயில் இறகை வைத்துக்கொண்டு அழகாய் காட்சியளித்தனர். கிருஷ்ணனை நேரில் பார்த்தது போல குழந்தைகளின் ஒப்பனைகள் அழகாக இருந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் கிருஷ்ண ஜெயந்தியில் இதுபோன்ற மாறுவேட போட்டி மனதிற்கு நிம்மதி தருவதாக பொதுமக்கள் கூறினர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி