விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் பொய்யப்பாக்கம் கிராம ஊராட்சி 7வது வார்டு உறுப்பினர் மற்றும் இந்திய அரசு நேரு யுவகேந்திரா அறிச்சுடர் நற்பணி மன்ற தலைவருமான அரவிந்த், தூய்மை பணியாளர்களுடன் இனைந்து கிராமத்தை சுத்தம் செய்தார்.
தூய்மை பணியாளர்கள் நம் நாட்டையும், கிராமத்தையும் சுத்தம் செய்து வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய வேலைகளை நிறுத்தாமல் மழையோ, வெயிலோ அனைத்து தினங்களிலும் வேலை செய்து வருகின்றனர். நாம் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் துர்நாற்றங்கள் அடங்கிய குப்பைகளை கூட அவர்கள் சகஜமாக கையால் எடுத்து சுத்தம் செய்து வருகின்றனர். அத்தகைய தூய்மை பணியாளர்களை நாம் எப்போதும் போற்றி பார்க்க வேண்டும்.
மேலும் தூய்மை பணியாளர்களை ஒரு சிலர் குப்பை அள்ளுபவர்கள் தானே என்று ஏளனமாக பார்க்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் பல சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அவர்களுக்கு விருதுகள் என வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம் பொய்யப்பாக்கம் கிராம ஊராட்சி 7வது வார்டு உறுப்பினர் அரவிந்த் சென்னை மறைமலை நகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் Administrative of panchayat and rural devolopment எனும் ஊரக வளர்ச்சி துறை சான்றிதழ் படிப்பு படித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் அரவிந்த் சமூக பிரச்சனைகள் மற்றும் கிராம பிரச்சனைகளில் முன்னின்று அவரால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்து தருகிறார். இந்நிலையில், தூய்மை பணியாளர்களின் உள்ளங்களில் உள்ள தாழ்வு மனபான்மை போக்கவும், அவர்களும் சக மனிதர்கள்தான் என்பதற்கும், அவர்களின் பணியில் ஏற்படும் சிக்கல் மற்றும் பொதுமக்களிடயே சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கிராமத்தை சுத்தம் செய்தார். இச்செயல் அக்கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram