Home /viluppuram /

விழுப்புரம் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் கீரை சாகுபடி..

விழுப்புரம் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் கீரை சாகுபடி..

விழுப்புரம்

விழுப்புரம் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் கீரை சாகுபடி..

Villupuram District Latest News | விழுப்புரம் அருகே கொசப்பாளையம், அன்னியூர், அடங்குனம் போன்ற கிராமங்களில் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி நல்ல மகசூல் எடுத்து லாபம் ஈட்டி  வருகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளை உணவில் விரும்பி சேர்த்துக் கொள்கின்றனர். அனைத்து வகை நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கீரைக்கு உண்டு. குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர் ரகத்தில் கீரை வகையும் ஒன்றாகும்.

கீரையில் பல வகைகள் உள்ளன. அரைக் கீரை, சிறு கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி, பாலக்கீரை, புளிச்ச கீரை, முருங்கை என பல வகைகள் உண்டு.

இதனிடையே விழுப்புரம் அருகே கசப் பாளையம், அன்னியூர், அடங்குணம் ஆகிய கிராமங்களில்   விவசாயிகள் கீரை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க:  அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தபட்சம் 25 ஏக்கரில் கீரை விவசாயம் மேற்கொண்டுள்ளனர். அரைக்கீரை சிறுகீரை பாலக்கீரை பொன்னாங்கண்ணி கீரை தண்டுக்கீரை என ஐந்து வகை கீரை வகைகளை பயிர் செய்து வருகிறார்கள். இங்கு பயிர் செய்யப்படும் கீரை வகைகள் பாண்டிச்சேரி சந்தைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு பயிர் செய்யும் கீரை வகைகளில் அரைக்கீரை, பாலக்கீரை வகைகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

அரைக்கீரையை ஒரு முறை விதைத்து விட்டு பல முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து  6 முதல் 7 முறை  அறுவடை செய்யலாம். இதே போல பாலக் கீரையையும் தொடர்ந்து அறுவடை செய்து லாபம் பார்க்கலாம் .சிறுகீரை பயிர் செய்து அடுத்த முப்பது நாட்களில் அறுவடை செய்யலாம், தண்டுக்கீரையும் இதே போல தான்.

இதையும் படிங்க:  விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு குட்நியூஸ் : ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கீரை நடவு முறை:

பூச்சி தொல்லை அதிகம் கீரையில் தென்பட்டாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளிக்கலாம். கீரையை 5 அடி அகலமும் 10 அடி நீளமும் கொண்ட வடிவமைப்பில் பயிர் செய்யலாம். மழைக்காலங்களில் மட்டுமே கீரையின் விலை அடிமட்ட விலைக்கு விற்பனையாகும். அப்போதுதான் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். மற்ற காலங்களில் கீரை நல்ல லாபம் தரக்கூடிய பயிராக இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கீரை வகைகள் சந்தைகளில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விலை போகும். ஒரு கட்டு 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கும் விற்பனையாகும். நல்ல விலை போனால் ஒரு கட்டு 15 ரூபாய்க்கும் விற்பனை ஆகும். கீரையை பொறுத்தவரைக்கும் விவசாயிகளுக்கு நல்ல லாபம் தான் நஷ்டம் ஏதுமில்லை என  விவசாயிகள் கூறுகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி