முகப்பு /விழுப்புரம் /

கூவாகம் திருவிழா 2023 : கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டி கும்மியடித்து ஆடிப்பாடிய திருநங்கைகள்! 

கூவாகம் திருவிழா 2023 : கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டி கும்மியடித்து ஆடிப்பாடிய திருநங்கைகள்! 

X
கூவாகம்

கூவாகம் திருவிழாவில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்

Villupuram Koovagam Transgenders Festival 2023 : கூவாகம் விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசை நடைபெற்றது. திருநங்கைகள் அரவானை கணவனாக பாவித்து மணப்பெண் கோலத்தில் வந்து பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்..

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறும் கூவாகம் விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மட்டும் அல்லாமல், இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும் வெளிநாட்டில் இருந்து வந்த திருநங்கைகள் அரவானை கணவனாக பாவித்து மணப்பெண் கோலத்தில் வந்து பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு அரவானை கணவனாக ஏற்றுக் கொண்டனர் அதன் பின் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி பாடி மகிழ்ந்தனர்.

விழாவின் இறுதி நிகச்சியான திரு தேரோட்டம் காலை 8 மணிக்கு அரவான் சிரசு கோவிலை சுற்றி வந்த பின்பு இந்த திருத்தேரில் பொருத்தப்பட்டவுடன் திருத்தேரோட்டம் தொடங்கியது .இதில் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் என இந்த திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்

இதனைத் தொடர்ந்து திருத்தேர் செல்லும் போது அதற்கு முன்பாக குவியல் குவியலாக கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து கும்மி அடித்த, பின்பு பந்தலடிக்குச் சென்று தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் தங்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து தாலியை துறந்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அப்பொழுது ஒப்பாரி வைத்து அழுத பின்பு, அங்குள்ள கிணற்றுக்களில் குளித்துவிட்டு பின்பு வெள்ளை புடவை அணிந்து விதவை கோலத்தில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதனைத் தொடர்ந்து தர்மம் பட்டாபிஷேகத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

    First published:

    Tags: Local News, Transgender, Villupuram