முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் தேர் திருவிழா!

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் தேர் திருவிழா!

X
கோலியனூர்

கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் தேர் திருவிழா

Kolianur Puthuvayamman Temple : விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புத்துவாயம்மன் கோவிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் தேர் திருவிழா

இதனையொட்டி புத்துவாய் ரேணுகாதேவி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் புத்துவாய் ரேணுகாதேவி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனையடுத்து முதலில் விநாயகர் எழுந்தருளிய சிறிய தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த பக்தர்கள், அதனைத்தொடர்ந்து புத்துவாய் ரேணுகாதேவி அம்மன் எழுந்தருளிய பெரிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர் மற்றும் புத்துவாய் ரேணுகாதேவி அம்மன் உள்ளிட்ட 2 தேர்கள் கோலியனூரில் உள்ள முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த தேர் திருவிழாவில் கோலியனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பனங்குப்பம், தொடர்ந்தனூர், ராகவன்பேட்டை, சாலை அகரம், மேல்பாதி, ராமையன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புத்துவாய் ரேணுகாதேவி அம்மனை தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Local News, Villupuram