முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரௌபதி அம்மன் கோவிலில் 473 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரௌபதி அம்மன் கோவிலில் 473 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..

X
Sri

Sri Draupadi Amman festival started with flag hoisting

Villupuram News | திரௌபதி அம்மன் கோவில் கொடியேற்ற விழாவில் கீழ்ப்பெரும்பாக்கம், பொய்யப்பாக்கம், எருமணதாங்கல், காகுப்பம், சாலையம்பாளையம், மகாராஜபுரம் உள்ளிட்ட மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மிகவும் பழமையும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் பங்குனி மாத   தீமிதி திருவிழாவிற்கான கொடியேற்றதுடன் தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு 473 ஆம் ஆண்டு தீ மிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஊரல் குளக்கரையில் இருந்து கரகம் ஜோடித்துக் கொண்டு வந்து மேளதாளங்கள் முழங்க கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்களின் பக்தி கோஷங்களிடையே கொடி மரத்தில் அன்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் கீழ்ப்பெரும்பாக்கம், பொய்யப்பாக்கம், எருமணதாங்கல், காகுப்பம், சாலையம்பாளையம், மகாராஜபுரம் உள்ளிட்ட 10 ஊர் மக்கள் கலந்துக்கொண்டு வழிபாடு நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிலையில் மார்ச்  22ம் தேதி முதல் நாள் உற்சவம் தொடங்கி 10ம் நாளான மார்ச்  31ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நடைப்பெற உள்ளது. இந்த விழாவில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

First published:

Tags: Local News, Villupuram