ஹோம் /விழுப்புரம் /

கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு பசுக்களை தானமாக வழங்கும் பக்தர்கள்.. பராமரிக்க திணறும் கோவில் நிர்வாகம்...

கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு பசுக்களை தானமாக வழங்கும் பக்தர்கள்.. பராமரிக்க திணறும் கோவில் நிர்வாகம்...

X
கீழ்பெரும்பாக்கம்

கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு பசுக்களை தானமாக வழங்கும் பக்தர்கள்

Keelperumpakkam Pasupathi Eswarar Temple | விழுப்புரம் அருகே, கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ளது பசுபதீஸ்வரர் கோவில். இக்கோயிலின் மூலவர் கடவுளாக கல் சிலையில் சிவன் உள்ளார். சிவ லிங்கத்தின் அடி 11.5 அடியாகும். சிவலிங்கத்தின் எதிரே அருளாம்பிகை அம்மன் சிலையும் உள்ளது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான கோயிலாக கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ஸ்ரீ அருள்மிகு உடனுறை பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு வருகை தரும் பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கையாக பசுவை அளிக்கின்றனர். பசுக்களின் பராமரிப்புச் செலவுக்கு பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவ வேண்டுமென கோவில் நிர்வாகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், சங்கரமடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும், தலைமை அலுவலகத்தின் ஆலோசனையின் படி, ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயம் டிரஸ்ட் இயங்கி வருகிறது. இதன்கீழ் ஸ்ரீ பசுபதி ஈஸ்வரர் ஆலயம் இயங்கி வருகிறது.

இக்கோயில் விழுப்புரம் அருகே, கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ளது. இக்கோயில் பல்லவர் கால கோயிலாகும். சிதலமடைந்த இக்கோயில் டிரஸ்ட் மூலமாக சீரமைத்து தற்போது பத்தர்கள் வணங்கும் கோயிலாக உள்ளது.

மேலும் படிக்க:  தேவார பாடல் பெற்ற கடைசி சிவன் தலம் - விழுப்புரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா.!

இக்கோயிலின் மூலவர் கடவுளாக கல் சிலையில் சிவன் உள்ளார். சிவ லிங்கத்தின் அடி 11.5 அடியாகும். சிவலிங்கத்தின் எதிரே அருளாம்பிகை அம்மன் சிலையும் உள்ளது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான கோயிலாக கருதப்படுகிறது.

அதற்குரிய எந்தவொரு சான்றிதழ்களும் சரியான முறையில் கிடைக்கவில்லை. இக்கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜேஸ்டா தேவியின் கல் சிற்பத்தை வைத்து இக்கோயிலின் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இக்கோயிலில் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ க்ஜேஷ்டா, கங்கையம்மன், வெற்றி முருகன் என பல்லவர் கால  சிலைகள் இக்கோயிலில் உள்ளது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில்

இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். மேலும் இங்குள்ள வெற்றி முருகனுக்கு ஒன்பது நாட்கள் தொடர்ந்து தீபம் ஏற்றி வந்தால் நினைத்த காரியம் கை கூடும் என்பதால் பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வருகை புரிந்து தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

ஜேஷ்டா சிற்பத்திற்கு அமாவாசை தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. பூஜையில் பக்தர்கள் எது வேண்டினாலும் நிச்சயமாக நிறைவேறும் என ஐதீகம் உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வராத கடன், வழக்கு பிரச்சனைகள், காரியத்தடை பிரச்சனை ஆகியன நீங்கும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் இந்த சிவனை வழிபட்டு செல்கின்றனர்.

மேலும் படிக்க:  விழுப்புரத்தின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!

அதுமட்டுமல்லாமல் இக்கோயிலின் சிறப்பு வேண்டுதலாக பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறினால் கோவிலுக்கு காணிக்கையாக, பசு மாடுகளை தானமாக தருகின்றனர். தற்போது கோவிலில் பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உள்ளன.

கோயிலின் உள்ளே பசுமாடுகள் செட் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பக்தர்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க பசுமாடுகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது பசு மாடுகளை பராமரிப்பதற்கு போதிய பண வசதி இல்லாத காரணத்தால், இதன் பிறகு கோவிலுக்கு காணிக்கையாக பசுக்களை அளிக்கும் பக்தகோடிகள் பராமரிப்புக்கு ஏதேனும் ஒரு தொகையை வழங்கினால் சிறப்பாக இருக்கும் எனவும் உதவும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பண உதவி செய்தால் இந்த பசுக்களை நல்ல முறையில் பராமரிக்க முடியும் என கோவில் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Villupuram