Home /viluppuram /

Exclusive: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவலன் செயலியை பயன்படுத்துங்கள் - விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா

Exclusive: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவலன் செயலியை பயன்படுத்துங்கள் - விழுப்புரம் எஸ்பி ஸ்ரீ நாதா

Use

Use the Police Assistance Processor to Prevent Crimes Against Women - SP Advice

Villupuram District: பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தமிழக காவல்துறை 'Kavalan' செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆபத்துக் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீ நாதா தெரிவித்துள்ளார்.

    நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சில சம்பவங்கள் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தைதையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற நிகழ்வுகளில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தமிழக காவல்துறை ‘காவலன்’ என்ற பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

    அதேபோல, விழுப்புரம் மாவட்டத்திலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    விழுப்புரம் மாவட்டத்தை குற்றமெல்லாம் மாவட்டமாக மாற்ற விழுப்புரம் காவல்துறையினர் தீவிர முயற்சி ஈடுபட்டுவருகின்றனர். மேலும் காவல் உதவி செயலைக் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள GOOGLE PLAY STORE-ல் ‘KAVALAN UTHAVI ( காவலன் உதவி )’ செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    செயலியை பதவிறக்கம் செய்தவுடன் அப்ளிகேஷன் ஒன்று ஓபன் ஆகும். பிறகு ரிஜிஸ்டிரேஷன் (registration) பக்கத்தில், உங்களது போன் நம்பர், பெயர், மாற்று போன் நம்பர் கேட்கும் அதனை பதிவு செய்ய வேண்டும்.

    பின் நெக்ஸ்ட் (NEXT ) பட்டனை அழுத்த வேண்டும்.அதையடுத்து உங்களது முகவரி, மின்னஞ்சல் ஆகியவற்றைப் பதிவு செய்து, சைன் அப் (sign up) என்ற பச்சை நிற பட்டனை அழுத்தினால் காவலன் செயலி பயன்படுத்தத் தயாராகி விடும்.

    இந்த செயலியை நீங்கள் ஒருமுறை பதிவு செய்தாலே போதுமானது, எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். பாதுகாப்பற்ற சூழலை பெண்கள் உணரும் தருவாயில் காவலன் உதவி பட்டனை அழுத்தினால் போதும், அழைக்கும் நபரின் இருப்பிடம் குறித்த தகவல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனே சென்று விடும், அடுத்த சில நிமிடங்களிலேயே கண்ட்ரோல் ரூமில் இருந்து அழைப்பு வரும்.

    காவலன் உதவி செயலி பட்டனைத் தொட்டவுடன் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து செல்போன் கேமரா தானாகவே 15 விநாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும். செல்போன் சிக்னல் கிடைக்காத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் எஸ்.பி - நியூஸ்18 உள்ளூர் செய்திக்கு பிரத்யேக பேட்டி:

    இது போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த செயலியை நிச்சயமாக அனைத்து பெண்களும் தங்களுடைய கைப்பேசியில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அறிவுரை வழங்கினார்.

    மேலும் இந்த காவல் உதவி செயலி பெண்களுக்கு மிக பயனுள்ளதாக அமைகிறது நிச்சயமாக அனைத்து பெண்களும் இந்த செயலியை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என கல்லூரி மாணவர்கள் மற்ற பெண்மணிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

    இந்த காவலன் செயலியை விளையாட்டுத் தனமாக பயன்படுத்தக் கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த செயலியை பெண்கள் மட்டுமில்லாமல், அவசர நிலையில் இருக்கும் முதியோர்கள் மற்றும் குடிமக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இந்த பாதுகாப்புச் செயலி 24 மணி நேரமும் இயங்குவதால், தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு, மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி