கரிகால சோழன் பசுமை மீட்பு படை குழுவினர் 2019 ஜூன் 23ஆம் தேதி விழுப்புரத்தில் இந்தப் பசுமை மீட்புக்குழுவை தொடங்கியுள்ளனர். இக்குழுவின் முக்கிய நோக்கமே, விழுப்புரம் நகரப்பகுதியில் அனைத்து வீதிகளிலும் மரக்கன்றுகள் வைத்து பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நிழல் தருவது தான்.
இக்குழுவில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவில் உள்ளவர்கள் அனைவரும் சமம் என்பதால் தலைவர் ஒருங்கிணைப்பாளர் என யாரும் பதவியை பிரித்துக் கொள்ளவில்லை.
அனைவரும் தங்களால் முயன்ற அனைத்து வேலைகளும் சமமாக செய்து வருகிறார்கள். இக்குழு வெற்றிகரமாக மூன்று வருடங்கள் கடந்து வந்துள்ளது. இக்குழுவினர் மூன்று வருடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை விழுப்புரம் நகரப்பகுதியில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்த மரங்களை மின்சாரத் துறைக்கு பாதிப்பில்லாத அளவில் மின்சார கம்பங்களை தொந்தரவு செய்யாத அளவிற்கு பார்த்து வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் நகர பகுதியில் உள்ள அனைத்து சிமெண்ட் சாலைகளை மெஷின் கொண்டு உடைத்து, அதன் பின்பு மரம் நடுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அனைத்து நீர்நிலைகளை சுற்றிலும் மரங்களை வளர்த்துள்ளனர்.
இக்குழுவின் செயல் குறித்து இக்குழுவில் உள்ள உறுப்பினர்களான செந்தில்குமார், கணேஷ் கூறுகையில், “நாங்கள் எங்களுடைய சொந்த வேலையை முடித்துவிட்டு, இந்த குழுவிற்காக பாதி நேரத்தை ஒதுக்கி வைத்து இந்த வேலையை செய்து வருகிறோம்.

கரிகால சோழன் மீட்பு படை..
இக்குழுவின் முக்கிய நோக்கமே, முடிந்த அளவில் விழுப்புரம் நகரத்தை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதே. தற்போது அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு இந்த மரக்கன்றுகள் கால்நடைகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு உதவுகிறது. நாங்கள் மரக்கன்றுகளை சின்ன செடிகளாக வைப்பதில்லை, அதற்கு பதிலாக 7அடி எட்டடி உயரமுள்ள மரங்களை தான் நடுகின்றோம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அப்போதும் கால்நடைகளால் மரங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நடுவது மட்டுமில்லாமல் அதனை அடிக்கடி வந்து பார்த்தும் பராமரித்தும் வருகின்றோம். மரங்களை நட்ட பின்பு அதனை ஒரு சாக்கு பையை கொண்டு கட்டிவிடுவோம்.வேம்பு, பாதாம், மகிழம், புங்கன் போன்ற ரக மரங்களை தான் நாங்கள் சாலையில் நடுகின்றோம்.

கரிகால சோழன் மீட்பு படை..
மேலும் இயற்கைக்கு நாம் நல்லதை செய்தால் இயற்கை நமக்கு இதை விட இரண்டு மடங்கு நல்லது தரும் என்பதே எங்கள் கருத்து. எனவே இந்த பணியை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். அதே போல மற்ற கிராமங்களில் உள்ள இளைஞர்களும் இது போன்ற மரங்களை நட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இக்குழுவில் இணைந்து தன்னார்வலராக செயல்பட விரும்புபவர்கள், கரிகால சோழன் பசுமை மீட்பு படை குழுவைச் சேர்ந்த அகிலன் என்பவரை 93454 00622 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..
சமூக அக்கறை உள்ளவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு, விழுப்புரம் நகரத்தை இன்னும் பசுமையாக மாற்ற முயற்சிக்கலாமே..!!
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.