ஹோம் /விழுப்புரம் /

தனியார் பள்ளியை மிஞ்சும் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி.. புதிய மாற்றங்களால் நெகிழும் மாணவர்கள்..

தனியார் பள்ளியை மிஞ்சும் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி.. புதிய மாற்றங்களால் நெகிழும் மாணவர்கள்..

கண்டமங்கலம்

கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி..

Villupuram Kandamangalam Govt School : தனியார் பள்ளிக்கு நிகராக செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி குறித்த சிறப்பு தொகுப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விழுப்புரத்தில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கண்டமங்கலம். இங்கு வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு 1,126 மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது 1,163 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி 1978 -ல் மேல்நிலைப்பள்ளியாக தகுதி பெற்றது.

கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி..

இப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டிடங்கள் பயிற்சி முறை, ஆய்வக வசதி ஆகியன உள்ளது.

தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் (40 ஆயிரம் ரூபாய் ) பள்ளியின் சுற்றுச்சுவரில் ஓவியம் வரைந்து கொடுத்துள்ளார்..  மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் பணம் திரட்டி பள்ளி வளாகம் முழுவதும் வண்ணம் பூசி உள்ளனர்.

கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி..

தகாத செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்து அம்மாணவர்களுக்கு  கவுன்சிலிங் அளித்து  தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இது போன்ற செயல்பாடு பெற்றோர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி..

தானாக திறக்கும் தானியங்கி குப்பைத்தொட்டியை பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மற்ற மாணவர்கள் மத்தியில் ஒரு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  மாணவர்களுக்கு சிலம்பம் உடற்பயிற்சி போன்றவையும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் பள்ளி  குறித்து மாணவர்கள் கூறியதாவது,  “தலைமையாசிரியர் வந்த பிறகு பள்ளி வளாகம் முழுவதும் மாறியுள்ளது. எங்களின் அனைத்து குறைகளையும் கோரிக்கைகளும் நிவர்த்தி செய்து உள்ளார்.

குடிநீர் வசதி, கழிவறை வசதி, பெண்களுக்கு தேவையான நாப்கின், ஆய்வக வசதி போன்றவை சிறப்பான முறையில் செய்து தந்துள்ளார். ஒரு தனியார் பள்ளிக்கு நிகராக இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது எனவும் எங்களால் முடிந்த மாற்றத்தை நாங்கள் கொண்டுவருவோம் என மாணவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இது குறித்து தலைமை ஆசிரியர் சேவியர் கூறுகையில் மாணவர்களின் ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சியும் நாங்கள் ஈடுபடுவோம் என கூறினார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram