Home /viluppuram /

கழிவுநீர் கால்வாயாக மாறிய சாலை.. 30 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் அவலம்.. அவதியுறும் கண்டாச்சிபுரம் மக்கள்..

கழிவுநீர் கால்வாயாக மாறிய சாலை.. 30 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் அவலம்.. அவதியுறும் கண்டாச்சிபுரம் மக்கள்..

விழுப்புரம்

விழுப்புரம் - கண்டாச்சிபுரம்

Viluppuram District | விழுப்புரம் மாவட்டம்  கண்டாச்சிபுரம் ஓட்டேரி நகரில் 30 வருடங்களுக்கு மேலாக கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அமைக்காததால் சாலையில் விடப்படும் கழிவு நீரால் முதியவர்கள், குழந்தைகள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்னர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஓட்டேரி தெருவில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளில் இருந்து கழிநீர் வெளியேற சாலை ஓரத்தில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்காததால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது சாலைகளில் விடப்படுகின்றது.

இதனால் சாலையில் கழிவு நீர் தேங்கி பாசி பிடிப்பதாலும், மழை காலங்களில் நீரானது தேங்கி நிற்பதால் பள்ளி மாணவர்கள் முதியவர்கள் பாதிப்படைகின்றனர். சில நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலையும் ஏற்படுகின்றன.

கழிவு நீர் சாலையிலேயே தேங்கி நிற்பதாலும் தொற்று நோய் ஏற்படுவதால் கழிவு நீர் கால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இப்பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க டெண்டர் விடப்பட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் ஏற்பட்ட குளறுபடியால் இன்றளவும் கழிநீர் வாய்கால் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் பகுதியில் விரைந்து கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது தொடர்ந்து அவ்வூரின் வார்டு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, பொதுமக்கள் சிலர் இந்த ஓடி கலோரி உள்ளது தெரிய ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

தற்போது அந்த ஆக்கிரமிப்பை அகற்றி இன்னும் ஒரு மாத காலத்தில் இருபக்கமும் கழிவுநீர் செல்வதற்கான வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறும் என கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி