ஹோம் /விழுப்புரம் /

ஊரில் காணாமல் போகும் பொருட்களை காட்டிக்கொடுக்கும் வேடியப்பன்.. மழவந்தாங்கல் வனப்பகுதியில் ஒளிந்திருக்கும் வரலாற்று ரகசியம்..

ஊரில் காணாமல் போகும் பொருட்களை காட்டிக்கொடுக்கும் வேடியப்பன்.. மழவந்தாங்கல் வனப்பகுதியில் ஒளிந்திருக்கும் வரலாற்று ரகசியம்..

வேடியப்பன்

வேடியப்பன் சாமி

Villupuram Mazhavanthangal Forest Area | விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மழவந்தாங்கல் வனப்பகுதியில் கி.பி. 15-ம் நூற்றாண்டு வேடியப்பன் சிற்பம் தற்போதும் வழிபாட்டில் இருந்து வருவது கண்டறியப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வேடியப்பன் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊரில் காணாமல் போன பொருள் கண்டுபிடிக்க உதவும் வேடியப்பன் சிற்பம் என பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், ஊரை சேர்ந்த பொதுமக்கள் , கண்டாச்சிபுரம் அருகே உள்ள மழவந்தாங்கல் வனப்பகுதியில் களஆய்வில் ஈடுபட்டார். அப்போது கி.பி. 15-ம் நூற்றாண்டு வேடியப்பன் சிற்பம் தற்போது வழிபாட்டில் இருந்து வருவது கண்டறியப்பட்டது.

இச்சிற்பம் பற்றி வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது, "விழுப்புரம் மாவட்டத்தின் எல்லை  கிராமமான மழவந்தாங்கல் வனப்பகுதியில் தனித்தப்பாறை ஒன்றில் வேடியப்பன் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 அடி உயரத்தில் முறுக்கிய மீசையுடன் வேடியப்பன் மிகவும் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார். அவரது கரங்களில் வில், அம்பு இடம்பெற்றுள்ளன.

மழவந்தாங்கல் வனப்பகுதி

பின்னணியில் பெரிய விலங்கு ஒன்று காட்டப்பட்டுள்ளது. அது, வேடியப்பனின் வாகனமான குதிரை என்று அவ்வூரைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வேடியப்பன் கால்களுக்கு கீழே 2 சிறிய நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதுபோல் காட்டப்பட்டுள்ளன. இந்த சிற்பம் கி.பி. 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூர் வேங்கடேசன் உறுதிப்படுத்தி இருக்கிறார். வேடியப்பன் வழிபாட்டினை மழவந்தாங்கல், மலையரசன்குப்பம், பில்ராம்பட்டு, வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கவுண்டர் வீட்டு வகையராவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வேடியப்பன் சுவாமி..

ஆநிரை மீட்புப்போரில் இறந்த வீரர் வேடியப்பனாக வழிபடப்பட்டு வருகிறார். இந்த வழிபாடு மிகவும் தொன்மையானது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடுகல்லாக வேடியப்பனை வணங்கி வருகின்றனர். தொன்மை தடயங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இங்குதான் வேடியப்பன் சிற்பம் பிரமாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன்

இதுவும் நடுகல் வகையைச் சேர்ந்தது. 700 ஆண்டுகளை கடந்த சிற்பம் இன்றும் அதே பெயரில் வழிபாட்டில் இருந்து வருவது சிறப்பிற்குரியது. அதுமட்டுமல்லாமல் இவ்வூரை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஊரில் ஏதேனும் பொருட்கள் காணாமல் போனாலோ திருடி சென்றாலோ, இங்கு உள்ள வேடியப்பன் சிற்பத்தினை வழிபட்டு, வேடியப்பன் வாகனமான குதிரையை ஊர்வலமாக கொண்டு சென்றால், திருடி சென்ற நபர்களை அடையாளம் காட்டும் என இவ்வூர் மக்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் இந்த சிற்பத்தினை ஊரை காக்கும்  காவல் தெய்வமாக கருதுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மழவந்தாங்கல் வனப்பகுதியில் மேலும் ஆய்வுகள் நடத்தினால் தொன்மை தடயங்கள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram