ஹோம் /விழுப்புரம் /

அவசரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் கூட வர முடியாது.. இருளர் இன மக்கள் வசிக்கும் விழுப்புரம் கொரலூர் கிராமத்தின் அவலம்..

அவசரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் கூட வர முடியாது.. இருளர் இன மக்கள் வசிக்கும் விழுப்புரம் கொரலூர் கிராமத்தின் அவலம்..

villupuram

villupuram / விழுப்புரம்

Villupuram Latest News | விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள கொரலூர் என்ற கிராமத்தில் பழங்குடி இருளர் மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கொரலூர் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், அவசர காலங்களில் உதவும் 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழியில்லாமல் சிக்கி தவிக்கிறோம் என கவலை தெரிவிக்கின்றனர் பழங்குடி இருளர் மக்கள்.

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள கொரலூர் என்ற கிராமத்தில் பழங்குடி இருளர் மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 50 வீடுகள் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஊரின் வயல்வெளிக்கு மத்தியில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்வதற்கும், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு, ஏதேனும் மருத்துவ அவசர காலங்களில் வெளியே செல்வதற்கும் எந்த ஒரு வாகனமும் இப்பகுதிக்குள் வருவதில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:  புளியஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? - பயணத்தை ஒரு வாரம் தள்ளி வச்சிருங்க..

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த இடத்திற்கு சென்று பார்க்க வேண்டுமென ஆணை பிறப்பித்தும் அதனை நடைமுறைப்படுத்தாமல் அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே எங்களை பயன்படுத்துகிறது. அதன் பின்பு எங்களுக்கு எந்த வசதி வேண்டும் என எதையும் பார்ப்பதில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

மழை பெய்தால் போதும் கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து விடும். சாதாரணமாகவே இந்த சாலையில் செல்ல முடியாது. இதில் மழை பெய்தால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு சேரும் சகதியுமாக இருக்கும். அந்த வழியில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வாகனத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் செல்கின்றனர்.

மேலும் படிக்க:  உலகில் நான்கு குடும்பங்கள் மட்டுமே செய்யும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் பற்றி தெரியுமா?

உடல்நிலை சரியில்லை என ஆட்டோக்காரரை அழைத்தால் கூட உள்ளே வருவதில்லை. நீங்கள் நடந்து மெயின் ரோட்டுக்கு வாங்கன்னு சொல்லுவாங்க. மருத்துவத்திற்கு கூட எங்களால் அவசரமாக செல்ல முடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பலமுறை மனு அளித்தும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் என்ன செய்தால் தான் அரசாங்க அதிகாரிகள் எங்களை தேடி வருவாங்க என பொதுமக்கள் ஆதங்கத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram