ஹோம் /விழுப்புரம் /

கல்லறை திருநாள் 2022: விழுப்புரத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்த உறவினர்கள்

கல்லறை திருநாள் 2022: விழுப்புரத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்த உறவினர்கள்

கல்லறைத்

கல்லறைத் திருநாள்

Villupuram Today News | விழுப்புரத்திலுள்ள கிறிஸ்தவ அரசர் கல்லறை தோட்டத்தில்,திரளான கிறிஸ்தவர்கள் தங்களின்  முன்னோர்களின் கல்லறையில், வண்ண மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட தங்களின் முன்னோர்களை நினைவுகூறும் விதமாக கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறைத் திருநாள் கடைபிடிக்கின்றனர்.

இதையொட்டி, விழுப்புரத்திலுள்ள கிறிஸ்தவ அரசர் கல்லறை தோட்டத்தில், திரளான கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறையில், வண்ண மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கனமழையையும் பொருட்படுத்தாமல் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க:  மதுரை திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் பற்றிய அறியப்படாத தகவல்கள்..!

இறந்தவர்களின் ஆன்மாக்கள் இளைப்பாற வேண்டுமென்பதற்காக கல்லறைத் தோட்டத்தில் திருப்பலிகளும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. மேலும், கல்லறை திருவிழா குறித்து வருகை புரிந்த பொதுமக்களிடம் கேட்டபோது , கல்லறை திருநாளான இன்று  எங்களுடைய  முன்னோர்களை, நினைவுகூற வந்துள்ளோம்" என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அனைத்து ஆன்மாக்களையும், மரியாதை செலுத்தி அவர்களுக்காக கடவுளிடம் வழிபடுவதே கல்லறை திருநாளின் நோக்கம்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram