ஹோம் /விழுப்புரம் /

Villupuram News : விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் சிறப்பு பூஜை

Villupuram News : விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் சிறப்பு பூஜை

X
விழுப்புரம்

விழுப்புரம் கைலாசநாதர் கோவில்

Karthigai Deepam 2022 : விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் கார்த்திகை தீபத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

ஆதியும் அந்தமும் அற்றவனாக சிவபெருமான் காட்சியளிக்கும் கார்த்திகை திருநாள் விழுப்புரத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். அவர்களின் ஆணவத்தை அடக்க சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்.

சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காண முடியாமல் போனதால் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர்களின் விண்ணப்பத்தை ஏற்ற சிவபெருமான் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதி வடிவில் மக்களுக்கு காட்சியளிக்கும் நாளையே கார்த்திகை தீபத் திருநாள் என்று நாம் கொண்டாடுவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் படிக்க : திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்!

ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான் வீற்றிருக்கும் தலம் திருவண்ணாமலை கோயிலாகும். இந்த திருவண்ணாமலை அருணாச்சல மலையின் கார்த்திகை தீபத் திருநாளன்று ஏற்றப்படும் கார்த்திகை தீபம் சிறப்பம்சம் மிக்கது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது. கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி, மகா தீபம் ஏற்பட்டு, சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் கைலாசநாதர் கோவில்:

அதேபோல் விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் கார்த்திகை தீபத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

மேலும் படிக்க : இந்த பேருந்திற்கு பெட்ரோல், டீசல் ஊற்ற தேவையில்லை - திருப்பூரில் புதிய முயற்சி

அதைத் தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் எழுந்தருளி உட்பிரகார புறப்பாடு நடந்தது. கோவிலின் மேல்தளத்தில் மகா தீபம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கோவிலின் வெளிப்பகுதியில் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் கைலாசநாதர் கோவில்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல முழு நிலவு வானில் தோன்றும் அந்திசாயும் வேளையில் வீடுகள் முழுவதும் விளக்கேற்றி மக்கள் கார்த்திகை தீப திருநாளை கொண்டாடுவது. வீடுகளிலும் சற்றும் குறைவில்லாத உற்சாகத்தில் தீப ஒளியால் வீட்டை அலங்கரித்தனர். நாம் ஏற்றும் தீபம் கஷ்டங்களை நீக்கும்⸴ கடன் தொல்லையை நீக்கும்⸴ குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்⸴ அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று தரும் என்பது ஐதீகம்.

First published:

Tags: Karthigai Deepam, Local News, Villupuram