ஹோம் /விழுப்புரம் /

வீட்டிலிருந்தபடியே சணல் பை தயாரிப்பில் வருமானம் ஈட்டி அசத்தும் விழுப்புரம் பெண்கள்..

வீட்டிலிருந்தபடியே சணல் பை தயாரிப்பில் வருமானம் ஈட்டி அசத்தும் விழுப்புரம் பெண்கள்..

விழுப்புரம்

விழுப்புரம்

Viluppuram District News : விழுப்புரம் மாவட்டம்  நல்லரசன் பேட்டையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற  20 பெண்கள் ஒன்றாக இணைந்து சணல் பை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.  குழுவாக இணைந்து சணல் பை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

2019ம் ஆண்டு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருட்களை தேடுவதில் மக்கள் கவனம் செலுத்தினர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத துணி பைகள், காகிதப் பைகள் மற்றும் சணல் பைகள் சந்தையில் தேடு பொருளாக மாறின.

இதை சரியாக பயன்படுத்திய சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத பை தயாரிப்பில் தமிழகம் முழுவதும் அதிக அளவில் ஈடுபட்டனர்.

வீட்டில் இருந்து எளிமையாக செய்யக்கூடிய வேலை என்பதாலும், போதிய வருவாய் வருவதாலும் பெண்கள் ஆர்வத்துடன் செயல்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் நல்லரசன் பேட்டையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 20 பெண்கள் ஒன்றாக இணைந்து சணல் பை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி...

குழுவாக இணைந்து சணல் பை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருமணம் ஆன பெண்கள் ஒன்றாக இணைந்து இந்த குழுவை நடத்தி வருகின்றனர். லேப்டாப் பேக், பவுச் வாட்டர் பாட்டில் பேக், லெட்டர் ஹோல்டர், பிரிண்டட் பேக், லஞ்ச் பேக், ஹேண்ட் பேக், மினி ஹேண்ட் பேக் என்ற இவர்களின் தயாரிப்புகள் நீண்டு கொண்டே போகிறது.

20க்கும் மேற்பட்ட விடிவங்களில் சணல் பைகளை தயாரிக்கின்றனர். மேலும் சணல் பையில் இன்னும் வித்தியாசமாக என்னென்ன செய்ய முடியுமோ அதற்குரிய தேடல்களிலும் தாங்கள் இருப்பதாக கூறினர்.

அசத்தும் விழுப்புரம் பெண்கள்..

தற்போது கல்லூரி பெண்கள் மத்தியில் சணல் பைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் சணல் பை விற்பனை சூடுபிடித்துள்ளது, என இக்குழுவில் உள்ள பெண்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 20 ரூபாயில் இருந்து 1500 ரூபாய் வரை உள்ள பொருட்களை தயாரிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தயாரிக்கும் பொருட்கள் உள்ளூரிலும், அரசாங்க நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் ஸ்டால்களை போட்டும் தங்களுடைய பொருட்களை சந்தைபடுத்தி வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே ஒரு நிலையான வருமானம் ஈட்டுவது எப்படி என, மற்ற பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram