விழுப்புரம் நேர்முகத்தேர்வு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களின் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 244 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த தேர்வானது வருகிற 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விழுப்புரம் கப்பியாம்புலியூரில் உள்ள ஏ.ஆர்.பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்(அனுமதிச்சீட்டு) விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழியாக (www.drbvpm.in/hallticket.php) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Must Read : மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம்
இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் உதவிக்கான குழுவின் பிரத்யேக தொலைபேசி எண்ணான 04146- 229854 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது drpdsvpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் யசோதாதேவி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy, Local News, Ration Shop, Villupuram