ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு - இதோ விண்ணப்பிக்கும் முறை...

விழுப்புரம் ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு - இதோ விண்ணப்பிக்கும் முறை...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Ration Shop : விழுப்புரம் மாவட்டத்தில் 244 விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை குறித்த விவரங்களும் வெளியிடப்ட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குறித்தும், வேலைக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாக உள்ள 244 விற்பனையாளர் (ரேஷன் கடை உள்ளிட்ட) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.

Must Read : விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் இதுதானா! - அட இது நம்ம புதுக்கோட்டையில தாங்க இருக்கு! 

விண்ணப்பங்கள் https://www.drbvpm.in என்ற இணையதளம் வழியாக நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5:45 மணி வரை வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஏதுவாக கூட்டுறவு துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கான வழிகாட்டு முறைகளை www.youtube.comல் உள்ள டி.என்., கோ ஆப் துறை சேனலில்(youtube Channcl - TNCOOP DEPT) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த அரிய வாய்ப்பை விழுப்புரம் மக்கள் பயன்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்பை பெற்று மகிழுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Job Vacancy, Local News, Ration card, Ration Shop, Villupuram