முகப்பு /விழுப்புரம் /

"கோடை வருது" விழுப்புரத்தில் மக்கள் தாகத்தை தணிக்க வரும் கிர்ணி பழம்!

"கோடை வருது" விழுப்புரத்தில் மக்கள் தாகத்தை தணிக்க வரும் கிர்ணி பழம்!

X
கிர்ணி

கிர்ணி பழம் சாகுபடி

Viluppuram | விழுப்புரம் அடுத்த மரக்காணம் பகுதிகளில் தர்பூசணி பழங்கள், கிர்ணி பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் பழங்கள் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் அடுத்த மரக்காணம் பகுதிகளில் தர்பூசணி பழங்கள், கிர்ணி பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் பழங்கள் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

விழுப்புரம் அடுத்த மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் கிர்ணி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது, கிர்ணி பழம் சாகுபடிக்கு தோட்டக்கலை துறை சார்பில் சொட்டுநீர் பாசனம், மல்சிங் சீட் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுவதால் ஒரு ஏக்கருக்கு 15 டன் முதல் 20 டன் வரை கிர்ணி பழம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு டன் கிர்ணி பழம் 18 முதல் 20 ஆயிரம் வரை விலை போகிறது.

மரக்காணம் பகுதியில் சாகுபடி செய்யப்படும் கிர்ணி பழம் குறைந்தபட்சமாக 2 கிலோ எடைகளை கொண்டுள்ளது. ஒரு கிலோ கிர்ணி பழம் 30 ரூபாய்க்கு விலை போகிறது. இப்பழங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தர்பூசணி மற்றும் கிர்ணி பழ சாகுபடி பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்ட கலை இயக்கம் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டருக்கு 15,000 மதிப்பிலான தர்பூசணி விதைகள் மற்றும் ஐந்தாயிரம் மதிப்பிலான இடு பொருட்கள் ஆகியவை வழங்கப்படுகிறது, மேலும் நிலப் போர்வை அமைப்பதற்காக ஒரு ஹெக்டருக்கு 16,000 பிண்ணேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும்,கோடை காலம் என்பதால் கிர்ணி பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் கிர்ணி பழங்களை வாங்கி செல்கின்றனர்.

First published:

Tags: Fruits, Local News, Villupuram, Viluppuram S22p13, Watermelon