ஹோம் /விழுப்புரம் /

“பெண் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்தை பாதுகாத்தல் அவசியம்” - விழுப்புரம் போலீஸ் எஸ்.பி. அறிவுரை

“பெண் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்தை பாதுகாத்தல் அவசியம்” - விழுப்புரம் போலீஸ் எஸ்.பி. அறிவுரை

X
விழுப்புரம்

விழுப்புரம்

Viluppuram District News : விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

அரசு பள்ளிகளில் அதிக அளவில் பெண் குழந்தைகளை சேர்க்கை செய்ய ஊக்கப்படுத்துதல் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ”சையில்டு பிரண்ட்லி ஸ்கூல்” போன்றவற்றில் தனித்திறமையை காட்டிய அதிக அளவில் பெண் குழந்தைகளை கல்வியாண்டில் சேர்க்கை செய்த 10 தலைமையாசிரியர்களுக்கு பாராட்டி விருதுகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்ரீநாதா வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “பெண்களை, குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு கல்வி மிக அவசியம். எனவே அனைவர் வீட்டிலும் பெண் கல்விக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஒரு காலை தூக்கி உயர்ந்து நிற்கும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை வழிபடுவதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா?

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பெண்கள் அனைவரும் சத்தான உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும், கல்விக்கு உடல் நலம், மனநலம் மிக முக்கியம்” எனவும் வருகை புரிந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடந்த கல்வி செயல்பாடு, கலை, விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய 36 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாவட்ட அளவில் நடந்த ஓவியம், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, வாசகம் எழுதுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக எண்ணிக்கையில் பரிசுகள் வென்ற பள்ளிக்கு ”ஓவர் ஆல் சாம்பியன்” கேடயம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Vizhupuram