ஹோம் /விழுப்புரம் /

சாக்பீஸில் நுணுக்கமான ஓவியங்கள்... அசத்தும் விழுப்புரம் ஓவிய ஆசிரியர்...

சாக்பீஸில் நுணுக்கமான ஓவியங்கள்... அசத்தும் விழுப்புரம் ஓவிய ஆசிரியர்...

X
ஓவிய

ஓவிய ஆசிரியர்

Viluppuram News : விழுப்புரம் மாவட்டம் அதனூர் கிராமத்தை சேர்ந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர் கண்ணன். இவர் நாளை கொண்டாடப்பட உள்ள ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், வித்தியாசமான முறையில் சாக்பீசில் ஹாப்பி நியூ இயர் 2023 என நான்கு பக்கமும் மிகவும் நுணுக்கமாக வடிவமைத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 வருடமாக பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் கண்ணன். இவர் சிறுவயதில் இருந்து ஓவியத்தின் மீது பட்டுள்ளதாக இருந்து வந்துள்ளார். கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து வித்தியாசமான முறையில் ஓவியங்கள், சிற்பங்கள் செய்ய ஆரம்பித்துள்ளார்.

பொட்டுக்கடலை, அவல், அரிசி, நெல், பனையோலை,மாத்திரை, கருக்கு மட்டை, சாக்பீஸ் போன்ற பொருட்களில் பல்வேறு உருவங்கள் வடிவமைப்பது, பல்பு உள் வாட்டமாக ஓவியங்கள் வரைவது, ரோஜா இதழ்களில் ஓவியம் வரைவது, அரச மர இலையில் ஓவியம் வரைவது போன்ற பல வித்தியாசமான முறைகளில் ஓவியம் வரைந்து தருகிறார் கண்ணன்.

இதுகுறித்து ஓவிய ஆசிரியரான கண்ணன் கூறுகையில், ”தமிழகத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை ஒன்று தான் ஆங்கில புத்தாண்டு. அதை வரவேற்கும் விதமாக வித்தியாசமான முறையில் சாக்பீஸில் நான்கு பக்கமும் ஹாப்பி நியூ இயர் 2023 என செதுக்கி உள்ளேன்.

இதையும் படிங்க : அடேங்கப்பா... ஆச்சரியப்படுத்தும் செஞ்சி கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க

இதனை சாக்பீஸில் ஊசி கொண்டு செதுக்குவதற்கு குறைந்த பட்சம் எனக்கு நான்கு மணி நேரம் ஆகிறது. இதன் நோக்கம் என்னவென்றால் ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாகவும், கலையில் புது புது யுக்திகளை ஓவியர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கையாள வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக இதனை செதுக்கியுள்ளேன்” என பகுதி நேர ஓவிய ஆசிரியர் கண்ணன் கூறினார்.

செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Local News, Vizhupuram