விழுப்புரம் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம், மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையேற்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியினை துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளி வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்து இயக்கிடும் வகையில் வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் இப்பணியினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
எத்தனை வாகனங்களில் ஆய்வு?
அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய் நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களில் செயல்படும் 59 பள்ளிகளில் 206 வாகனங்களும் மற்றும் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் திண்டிவனம், வானூர், மரக்காணம் ஆகிய வட்டங்களில் செயல்படும் 35 பள்ளிகளில் 187 பள்ளி வாகனங்கள் செஞ்சி மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் சார்பில் செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய வட்டங்களில் 27 பள்ளிகளில் 93 பள்ளி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : எச்சரிக்கை..! கோடை சீசனுக்கு மாம்பழங்கள் வாங்கும்போது இந்த விஷயங்களை கவனிங்க..!
122 தனியார் பள்ளிகளில் உள்ள 260 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அரசு விதிகளுக்குட்பட்டு போக்குவரத்து ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. வாகனம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருக்க வேண்டும். வாகனம் இடதுபுறத்தில் பள்ளியின் பெயர், விலாசம், தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் எழுதப்பட்டுயிருக்க வேண்டும். வாகனத்தின் பின்இடது புறத்தில் பள்ளி வாகன பொறுப்பாளர் தொலைபேசி எண், வட்டார போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண், பள்ளி எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் தொலைபேசி எண் மற்றும் பள்ளியின் மின்னஞ்சல் முகவரி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
என்னென்ன ஆய்வு செய்யப்பட்டது?
பள்ளி வாகனத்தின் கதவுகள் மற்றும் தாழ்ப்பாள்களும் நல்ல முறையில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். அனைத்து மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி, வாகன வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுயிருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் வலது பின்புறத்திலோ, அல்லது பின் வலது புறத்திலோ 150 ×120 செ.மீ அளவுள்ள அவசர கால கதவு அமைக்கப்பட்டுயிருக்க வேண்டும் உள்ளிட்ட அரசு விதிகளின் படி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் பழுதடைந்துள்ளதை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டும் வாகனத்தை கொண்டு அனுமதி பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் நாளை ஆய்வுக்கு கொண்டுவர உள்ளார்கள்.
ஓட்டுநர் உரிமமும் ரத்து
பள்ளி வாகனங்களை பொறுத்த வரை வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். அனுமதிபெறாத வாகனங்கள் பள்ளியின் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறிந்தால் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், வாகன ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.
மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தினந்தோறும் கவனிக்க வேண்டிய பணி என்னவென்றால் பள்ளி வாகனத்தில், அவசர வழி கதவு சரியாக உள்ளதா என்பதை பார்த்து உறுதி செய்து கொள்ள ரேயான்டும். மாணவ, மாணளி யர்களை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் பொழுது இரண்டு பக்க கதவுகளும் சரியாக அடைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
வாகனத்தை இயக்கக்கூடாது
வாகனம் நின்றதும் பள்ளி குழந்தைகள் இறங்கி சென்றதை உறுதி செய்த பின் வாகனத்தை இயக்க வேண்டும். வானத்தில் உள்ள தீ தடுப்புக் கருவி சரியாக இயங்குகிறதா என்பதை அவ்வப்பொழுது பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள் வாகனத்தை ஒட்டும்பொழுது எக்காரணம் கொண்டும் அடுத்த வாகனத்தை முந்திச் செல்ல வேண்டும் என்ற நிலையில் வாகனத்தை இயக்கக்கூடாது.
பள்ளிக்கு குழந்தைகள் வர ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ காலதாமதம் ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நிதானமாக வாகனத்தை இயக்க வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கக்கூடாது. அதேபோல், நடத்துனர்களும் வாகனத்துக்குள் குழந்தைகள் இருக்கையில் அமர்ந்த பின் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும். அதேபோல், வாகனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இருக்கையின் அளவிற்கு மட்டுமே பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டுக்குச் குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும்.
நடத்துனரின் பணி என்ன?
பள்ளியிலிருந்து செல்லும்பொழுது சாலையை கடந்து குழந்தைகள் செல்லும் நிலை இருந்தால் பள்ளி வாகனத்தை நிறுத்தி நடத்துனர் குழந்தைகளை பாதுகாப்பாக சாலையை கடந்து சென்ற பின் பள்ளி வாகனத்தை இயக்க வேண்டும். அதேபோல், பள்ளி வாகனங்களை திரும்பும்பொழுது பின்பக்கமாக வாகனம் வரும்பொழுது நடத்துனர் வாகனத்தின் பின்புறம் குழந்தைகள் இருக்கிறார்களாக என்பதை பார்த்து பாதுகாப்பாக வாகனத்தை திருப்பி எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், பள்ளி நிர்வாகத்தினர் வாகனங்களை அவ்வப்பொழுது ஆய்வு செய்து தேவையான வானத்தை முழுமையாக நல்ல நிலையில் இருக்கும் வகையில் வைத்து பயன்படுத்துவதுடன், குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி வாகனத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் சரியாக உள்ளதை அவ்வப்பொழுது உறுதி செய்ய வேண்டும்.
வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு அவ்வப்பொழுது தக்க அறிவுரை வழங்கி பாதுகாப்பாக வாகனத்தை இயக்க வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தையையும், பெற்றோர்கள் எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் உங்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்களோ, அந்த அளவிற்கு நம்பிக்கையுடன் பிள்ளைகளை நன்றாக பாதுகாப்புடன் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த அளவிற்கு பொறுப்புள்ள பணியே ஓட்டுநர் பணியாகும்.
ஓட்டுநர்களுக்கான அறிவுரைகள்
அதற்கேற்ப ஓட்டுநர்களுக்கு நல்ல அறிவுரைகள் வழங்குவதுடன் அவர்களுக்கு தேவையான கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி கண்காணித்து வர வேண்டும். விழுப்புரம் மாவட்டம் எந்த விபத்தும் அல்லாத மாவட்டமாக அமைய உங்கள் பணி சிறப்பாக தொடர்ந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தொடர்ந்து, தீயணைப்புத்துறையின் சார்பில் தீ தடுப்பு தொடர்பான விளக்கவுரை மற்றும் செயற்முறை விளக்கம் அளித்தனர், அடிப்பட்ட குழந்தைகளுக்கு முதலுதவி எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து 108 ஊழியர்கள் தெளிவாக செய்து காட்டினர். மேலும் கண் மருத்துவமனையின் மூலம் வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram