கிடா குடலை மாலையாக அணிந்து நடக்கும் வினோத திருவிழா
விழுப்புரம் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் கிடாவினை உறங்க வைத்து வெட்டி குடலை மாலையாக அணிந்து கொண்டு ஊர் எல்லைகளை சுற்றி வரும் நூதன திருவிழாவில் திராளன பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டினை அடுத்த எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் கனகதண்டி மகா மாரியம்மனுக்கு 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று வந்தன.
இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்று அம்மனுக்கு ஆட்டினை உறங்க வைத்து கிடா வெட்டி குடலினை உறுவி ஊதி மாலையாக அணிவித்து ஊர் எல்லைகளை சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நூதன முறையில் கொண்டாடப்படும் திருவிழாவில் வெட்டிய ஆட்டின் ரத்த சோற்றினை பருகினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளதால் குழந்தை பாக்கயம் இல்லாதவர்கள் மடியேந்தி ரத்த சாப்பாட்டினை வாங்கி சென்றனர்.
திருவிழாவினை முன்னிட்டு பத்து நாட்களும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு வீதியிலா நடைபெற்றன. இந்த நூதன முறை திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் சென்று வந்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.