Home /viluppuram /

அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

விழுப்புரம் செஞ்சிக் கோட்டை

விழுப்புரம் செஞ்சிக் கோட்டை

அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் இடம் பெற்ற பிரபல பாடல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையில்தான் எடுக்கப்ட்டது. மேலும் இந்த ஷூட்டிங் ஸ்பாடில் எடுக்கப்பட்ட படங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gingee, India
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் உள்ள பிரபல கோட்டைதான் ‘செஞ்சிக் கோட்டை‘ இது சென்னையில் இருந்து 160 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, ‘இது இந்தியாவில் உள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது’ எனக் கூறுமளவிற்கு அரண் அமைக்கப்பட்ட கோட்டையாக விளங்கியது.

செஞ்சிக் கோட்டை:

மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்து முக்கோண வடிவமாக அமைக்கப்பட்ட செஞ்சிக்கோட்டையானது, பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

பிரம்மாண்டமான செஞ்சிக் கோட்டையின் ஒருபகுதி


செஞ்சிக் கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னனான செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன.

செஞ்சியில் எடுக்கப்பட்ட தெலுங்குப் படக் காட்சி


வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்த்திரி அவர்கள் தன்னுடைய ‘சோழர்கள்’ நூலில் விக்கிரம சோழன் உலா காடவனைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. அக் காடவன் ‘வலிய போர் யானைகளைக் கொண்டவன். அவன் வலிமையான கோட்டைகளையும் மதில்களையும் கொண்ட செஞ்சியார் கோன் என்பவன் ஆவான்’ எனக் குறிப்பிடுகிறார்.

செஞ்சிக் கோட்டையில் பாடல் காட்சி


12 ஆம் நூற்றாண்டு மற்றும் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக்காலமான 13 ஆம் நூற்றாண்டிலும் செஞ்சிக்கோட்டை காடவர்களின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகவே சொல்லப்படுகிறது. அதன் பிறகு விஜயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், ஆற்காடு நவாப்புகள் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறி மாறி இருந்து வந்துள்ளது இந்த செஞ்சிக் கோட்டை.

கல்லூரி படத்தின் காட்சி


இந்த கோட்டையை கைப்பற்றி நடந்த போர்களின் பட்டியல் நீண்டுகொண்டு போகும். தற்போது சிறிய வகை விலங்களும், பறவைகளுமே இங்கு வசிக்கின்றன. மனிதர்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை. இவை ஒருபுறம் இருக்க, இந்த கோட்யின் அழகும் அதன் வலிமையும் இந்த இடத்தில் பல்வேறு சினிமா பாடல்களை படம்பிடிக்கும் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளது.

செஞ்சியில் அமர்க்களம் படத்தில் அஜித், ஷாலினி


செஞ்சி ஷூட்டிங் ஸ்பாட்:

அந்த வகையில் இங்கே எடுக்கப்பட்ட சில படங்களைப் பற்றி இங்கே காணலாம். அஜித், ஷாலினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தின் பிரபல பாடலான ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் செஞ்சி கோட்டையில்தான் ஷூட் செய்யப்பட்டது.

சமுத்திரகணி நடிப்பில் வெளியானி சாட்டை படத்தின் இடம் பெற்றுள்ள ‘வா நண்பா வா’ பாடல் செஞ்சி கோட்டையில்தான் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் செஞ்சி கோட்டையை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

பிரம்மாண்டமான செஞ்சிக் கோட்டை


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான இந்தியன் படத்தின் ‘கப்பலேறி போயாச்சு’ பாடலின் சில காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டன.

அறை எண் 350-ல் கடவுள் படத்தில் வரும் ‘ஆவாரம் பூக்கள்’ பாடலின் சில காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டன.

சிலம்பரசன், சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான கோவில் படத்தில் வரும் ‘கொக்கு மீன திங்குமா’ என்ற பிரபல பாடலின் சில காட்சிகள் செஞ்சியில் எடுக்கப்பட்டவைதான்.

தனுஷ், மீராஜாஸ்மின் நடித்த பரட்டை என்கிற அழகு சுந்தரம் படத்தின் ‘எங்கடா அழகு உந்தன் அரண்மனையோ’ பாடலின் பல காட்சிகள் இந்த செஞ்சி கோட்டையை சுற்றியே எடுக்கப்பட்டிருக்கும்.

ரவிச்சந்திரன் இயக்கத்தில் நந்தா, ஷெரின் நடிப்பில் உருவான உற்சாகம் படத்தில் இடம் பெற்ற ‘நாறும் பூக்கள்’ பாடலில் இந்த செஞ்சி கோட்டையை பார்க்க முடியும்.

இது போல் தமிழ் படங்கள் மட்டும் அல்லாமல், பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில், தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகி நாடு முழுவதும் பிரபலமடைந்த படம் ‘அகண்டா’ (Akhanda) இந்த படத்தில் வரும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் செஞ்சியில் உள்ள வெங்கட் ரமணர் கோவிலில்தான் எடுக்கப்பட்டது. இது போல ஏராளமான படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. இந்த செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்து வருகிறது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி