முகப்பு /விழுப்புரம் /

முயல்களுக்கு இதையெல்லாம் சாப்பிட கொடுக்க கூடாது? செஞ்சியில் பண்ணை நடத்தும் இளைஞர் சொன்ன ஆச்சர்ய தகவல்!

முயல்களுக்கு இதையெல்லாம் சாப்பிட கொடுக்க கூடாது? செஞ்சியில் பண்ணை நடத்தும் இளைஞர் சொன்ன ஆச்சர்ய தகவல்!

X
முயல்களுக்கு

முயல்களுக்கு இதெல்லாம் சாப்பிட கொடுக்க கூடாது?

Rabbit Farm : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் உள்ள கணக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த குழந்தை இயேசு என்பவர் 4 வருடங்களாக வெற்றிகரமாக முயல் பண்ணை நடத்தி நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கணக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த குழந்தை இயேசு என்பவர் முயல் வளர்ப்பில் ஆர்வம் காட்டினார். பின்னர் அதையே தொழிலாக மாற்றினார். முயல்களை செல்லப்பிராணிகளாக மட்டுமல்லாமல், வருமானத்துக்காகவும் வளர்க்கலாம் என்கிறார் குழந்தை இயேசு.

முயல்களை எப்படி பராமரிப்பது, என்னென்ன உணவுகள் கொடுப்பது, இந்த தொழிலை ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது பற்றி குழந்தை இயேசு நம்மிடம் கூறியதாவது, “நான் 12ம் வகுப்பு படித்துவிட்டு ஐடிஐ படித்தேன். அதன் பிறகு பல ஊர்களில் சென்று வேலை பார்த்து வந்தேன். நல்ல வருமானம் பார்த்தாலும் எனக்கு எந்த வேலைகளிலும் நிம்மதி கிடைக்கவில்லை. அதன் பிறகு என் சொந்த கிராமத்துக்கு வந்து விட்டேன். எனக்கு சிறுவயது முதலே முயல் என்றாலே பிடிக்கும். ஏன் முயல் வளர்ப்பில் லாபம் பார்க்க முடியாதா? என யோசித்து சிறியதாக ஆரம்பித்தேன்.

அதன் பிறகு நான் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வருமானமும் மனதிருப்பையும் கிடைத்தது. நான் தொடங்கிய முயல் பண்ணை எனக்கு கை கொடுத்தது. தற்போது 3 வருடங்கள் முடிந்து 4ம் வருடத்தில் அடி எடுத்து வைத்து வெற்றிகரமாக முயல் பண்ணை வளர்ப்பில் லாபம் பார்த்து வருகிறேன். 10 சென்ட் இடத்தில் அகல்யா என்ற முயல் பண்ணை வைத்துள்ளேன். ஒவ்வொரு நாளுக்கும் குறைந்தபட்சம் என்னிடம் இருந்து வளர்ப்பதற்காகவும் மாமிசத்திற்காகவும் 4 முயல்கள் வெளியே விற்பனைக்கு செல்லும். தற்போது இனப்பெருக்கத்திற்காக 15 முயல்களை வைத்துள்ளேன்.

முயல் பண்ணைக்கு தேவையான முயல்களை கொடைக்கானல் பகுதியில் மன்னவனூர் என்ற பகுதியில் இருந்து வாங்கி வந்தேன். மாமிசத்திற்கு என்றால் ஐரோப்பிய முயல்களான, ஒயிட் ஜெயின்ட் , சோவியத் சின்சில்லா ஆகியவை சரியாக இருக்கும். வளர்ப்புக்கு என்றால் நியூசிலாந்து ஒயிட் ரகம் சரியாக இருக்கும். தற்போது என்னிடத்தில் 6 வகையான முயல்கள் உள்ளது. ஒயிட் ஜெயின்ட், சோவியத் சின்சில்லா, நியூசிலாந்து ஒயிட், பிளாக் ஒயிட், டச், கிரேசெயிண்ட் ஆகும். முயல்களின் ஆயுட்காலம் 9 முதல் 12 வருடங்கள் ஆகும்.

ஒவ்வொரு முயலும் குறைந்தபட்சம் 3 முதல் 12 குட்டிகள் போடும். முயலுக்கு ஒரு நாளைக்கு அடர் தீவனம் 100 கிராம் பசுந்தீவனம் 300 கிராம் கொடுக்க வேண்டும். முயல் கூண்டில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சண்டல், கல்யாண முருங்கை, அகத்தி, மல்பெரி போன்றவற்றை கொடுக்கலாம். காலிஃப்ளவர், முட்டை கோஸ் போன்ற இலைகளை முயலுக்கு கொடுக்க கூடாது. ஏனென்றால் அதில் அதிக அளவில் பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுவதால் இதனை கொடுக்க கூடாது.

மேலும் தவிடு, கடலை புண்ணாக்கு, அரிசி, நாட்டு சர்க்கரை சேர்த்தும் முயலுக்கு கொடுக்கலாம். இதுபோன்ற முயலை நன்றாக பராமரித்து வந்தால் ஒவ்வொரு முயலும் சராசரியாக 2 கிலோவுக்கு எடை வரும். முயல் பண்ணைக்கு முதலீடாக 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன், ஆனால் தற்போது முதலீடு போடாமல் லாபம் எடுத்து விடுகிறேன். வளர்ப்புக்காக விற்கப்படும் முயல்கள் 3 மாத குட்டி 500 ரூபாய்க்கு, மாமிசத்திற்காக ஒரு கிலோ எடை கொண்டது 350 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதுபோல முயலுக்கு சொறி நோய் தாக்கும் அபாயம் உள்ளது. அதற்கு மஞ்சள் மற்றும் வேப்ப எண்ணெய் சேர்த்து மேலே பூசினால் சரியாகிவிடும். இதுபோல முயல்களை பார்த்து பார்த்து வளர்த்தால் நிச்சயமாக முயல் வளர்ப்பில் நல்ல வருமானம் பார்க்க முடியும்” என குழந்தை இயேசு கூறினார்.

First published:

Tags: Local News, Villupuram