ஹோம் /விழுப்புரம் /

தொழில் முனைவோராக ஆசையா? விழுப்புரத்தில் இலவச பயிற்சியுடன், கடனுதவி வழங்கும் இந்தியன் வங்கி 

தொழில் முனைவோராக ஆசையா? விழுப்புரத்தில் இலவச பயிற்சியுடன், கடனுதவி வழங்கும் இந்தியன் வங்கி 

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram News | விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதுடன், கடன் உதவியும்  அளித்து தருகிறது இந்தியன் வங்கி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதுடன், கடன் உதவியும்  அளித்து தருகிறது இந்தியன் வங்கி.

விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு, காணை செல்லும் சாலையில் நான்கு முனை சந்திப்பு அருகே அலமேலுபுரம் சிக்னல் அருகே உள்ளது இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம். விழுப்புரம்  மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும், பல்வேறு விதமான சுயதொழில் குறித்து இலவச பயிற்சிகளை  வழங்கி வருகிறது.

வங்கி வளாகத்திலேயே தொழில் முனைவோர் திட்டத்தில் பயிற்சியை முடித்த பெண்களின் கைவினைப் பொருட்களை, சந்தைபடுத்த கண்காட்சி ஒன்றுக்கு இந்தியன் வங்கி சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.  இந்த கண்காட்சியில் பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள், ஊறுகாய் வகைகள், சணல் பைகள் என பல பொருட்கள்  காட்சிப்படுத்தப்பட்டன. இக்கண்காட்சியில்  இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் அனிதா கலந்து கொண்டார்.

மேலும் படிக்க:  விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

சுய தொழில் முனைவோர் பயிற்சி திட்டம் குறித்து இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் அனிதாவிடம் கேட்டபோது , “ 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5,000 பேருக்கு சுய தொழில் பயிற்சி அளித்துள்ளோம். அதில் 4,000 பேர் தற்பொழுது மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்கள். 2,000 பேருக்கு வங்கி மூலம் நிதி உதவியும் அளித்துள்ளோம்.

இலவச தொழிற் பயிற்சி:

ஆடு ,கோழி, மாடு வளர்ப்பு உட்பட 61 விவசாயம் சார்ந்த பயிற்சிகள்  இலவசமாக அளிக்கப்படுகின்றன. அதேபோன்று, செல்போன் சர்வீஸ், கணினி மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் பழுது சரிப்பார்ப்பது குறித்தும் இங்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சிக்கு வரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் காலை, மதிய உணவு மட்டுமின்றி இடையில் டீ, சிற்றுண்டி ஆகியவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க:  தேவார பாடல் பெற்ற கடைசி சிவன் தலம் - விழுப்புரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா.!

இலவச உபகரணங்கள்:

பயிற்சி முடிந்த பின்னர் சுய தொழில் தொடங்க ஆசைப்படும் தொழில் முனைவோருக்கு இலவசமாக தையல் மெஷின் போன்ற உபகரணங்களும் இங்கு வழங்கப்படுகிறது. " என்று கூறினார்.

பொதுமக்களிடையே வரவேற்பு குறைவு:

ஆனால் இது போன்ற பயிற்சிகளுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் அல்லது 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பவர்கள் இந்த பயிற்சியை பெற தகுதியுடையவர்களாவர். ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலையில் உள்ள அனைத்து தரப்பட்ட மக்களுக்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இலவச தொழில் முனைவோர் பயிற்சியில் பங்கு பெற்று, தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருகப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே திட்ட அதிகாரிகளுடைய கோரிக்கை ஆகும்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram