Home /viluppuram /

நகராட்சி  பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு -ஆசிரியர் பற்றாக்குறை!

நகராட்சி  பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு -ஆசிரியர் பற்றாக்குறை!

Increase

Increase enrollment of students in municipal school Teacher shortage

Villupuram District: விழுப்புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டடம் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி, மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை .

    விழுப்புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டக்கோரியும் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரியும், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அம்மா பூந்தோட்டம் குளம் பூங்காவிற்கு பக்கத்தில் அமைந்துள்ளது இப்பள்ளி.
    இப்பள்ளியில் கடந்த 2019-20ம் ஆண்டு மாணவ, மாணவியர்களின் சேர்க்கை 226 இருந்தது. 2021-22ம் ஆண்டு இரு மடங்காக உயர்ந்து தற்போது 553 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 5 வகுப்பறை மட்டுமே உள்ளது.

    ஒரே வகுப்பறையில் 110 மாணவர்கள் படிக்கும் அவலம் உள்ளது. கொரோனா காலகட்டத்திலிருந்து மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இந்த பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் 66 மாணவர்களும், இரண்டாம் வகுப்பில் 62 மாணவர்களும், மூன்றாம் வகுப்பில் 110 மாணவர்களும்,நான்காம் வகுப்பில் 160 ஒரு மாணவர்களும்,ஐந்தாம் வகுப்பில் 154 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
    இப்பள்ளிக்கு விக்கிரவாண்டி, ஜானகிபுரம், பிடாகம், கப்பூர், நேமூர், தென்பேர், கெடார் போன்ற பல பகுதியிலிருந்து மாணவர்களை பள்ளியில் சேர்வதற்கு வருகை புரிகின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல கட்டிடங்கள், மாணவர்கள் பாடம் கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் இல்லை என்பதே இப்பள்ளியின் அவல நிலை ஆகும்.

    மேலும், வகுப்பு ஆசிரியர், ஆசிரியைகள் 3 பேர் மட்டுமே உள்ளனர். கழிவறை வசதி, கட்டட வசதி, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், மாணவ, மாணவிகள் கடும் அவதியடைகின்றனர்.

    இப்பள்ளிக்கு குறைந்தபட்சம் எட்டு வகுப்பறைகள் பத்து ஆசிரியர்கள் நியமித்தால் சிறப்பாக அமையும் என இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    எனவே, இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி