விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு வீரர்களின் மூன்று வகைகளில் சிறப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சிறந்த வீரர்கள் சிறப்பு உதவித்தொகை 25 லட்சம் ரூபாய் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல ஊக்குவிக்கும் திட்டத்தில் 10 லட்சம் ரூபாய், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் என சிறப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த உதவித் தொகை தேசிய, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும். இத்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் ஏற்கனவே தபால் வழியாக நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
Must Read : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!
இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இது தொடர்பான விபரங்களுக்கு 9514000777 என்ற ஆடுகள தகவல் மையத்தை, அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Sports, Villupuram