முகப்பு /விழுப்புரம் /

நீண்ட நாள் கனவு நிறைவேறியது.. விழுப்புரம் இருளர் இன மக்கள் மகிழ்ச்சி!

நீண்ட நாள் கனவு நிறைவேறியது.. விழுப்புரம் இருளர் இன மக்கள் மகிழ்ச்சி!

X
தொகுப்பு

தொகுப்பு வீடுகள்

Villupuram News | விழுப்புரம் மாவட்டம் ஏரிக்குடி பகுதியில் பல ஆண்டுகளாக ஏரிக்கரை ஓரம் வாழ்ந்து வந்த இருளர்களுக்கு அரசாங்கம் மூலம் தொகுப்பு வீடுகள் வழங்கப்படுகிறது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடநெற்குணம் ஊராட்சியில் சுமார் 37 இருளர் குடும்பங்கள் ஏரிக்கரையோரம் எந்த ஒரு அடிப்படை வசதிகளின்றி பல வருடங்களாக குடிசையில் வசித்து வந்தனர். மழையிலும், வெயிலிலும், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும் பல்வேறு சிரமங்கள் மத்தியில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தங்களுக்கு அரசு நிரந்தர வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தற்பொழுது 37 இருளர் குடும்பங்களுக்கு வடநெற்குணத்தில் வீட்டு மனை பட்டா வழங்கி, அதில் 31 வீடுகள் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    நீண்ட நாள் கனவும்,கோரிக்கையாக இருந்த வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டி கொடுத்ததற்க்கு இருளர் மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    First published:

    Tags: Local News, Villupuram