ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

விழுப்புரத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

X
In

In Villupuram, the price of flowers increases on the occasion of Karthika Deepam

விழுப்புரம் மலர் சந்தையில்  பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் கார்த்திகை தீபத்தையொட்டி தேவை அதிகரித்துள்ளதாலும் பூக்கள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கார்த்திகை தீப விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ”பூக்களின் வரத்து குறைவாலும் , தேவை அதிகம் ஏற்பட்டுள்ளதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது” என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குண்டுமல்லி, முல்லை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்தும் குறைந்துள்ளது.குண்டு மல்லி கிலோ ரூ.1500க்கும், முல்லை அரும்பு கிலோ ரூ. 1200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் கனகாம்பரம் கிலோ ரூ.800-க்கும், காக்கட்டான் ரூ.700க்கும், ஜாதிமல்லி ரூ.1000க்கும், அரளி ரூ.300க்கும், பன்னீர் ரோஜா ரூ.200 க்கும், சாமந்தி ரூ.150 க்கும், கோழிக்கொண்டை ரூ.50 க்கும்,சம்பங்கி ரூ.100க்கும், கேந்தி சாமந்திரூ.50க்கும் விற்பனையானது.

விழுப்புரத்தில் இயங்க கூடிய பல்வேறு சில்லறை மலர் அங்காடிகளில் குண்டு மல்லி விலை அதிகரித்தால் அதை வியாபாரிகள் வாங்கவில்லை என தெரிவிக்கின்றனர். குண்டு மல்லி பூவுக்கு பதிலாக நந்தியாவட்டைப் பூவை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

First published:

Tags: Local News, Tamil News, Villupuram