ஹோம் /விழுப்புரம் /

மின்கழிவுகள் - விழுப்புரம் கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

மின்கழிவுகள் - விழுப்புரம் கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

மின்கழிவுகள்

மின்கழிவுகள்

E-Waste| விழுப்புரம் மாவட்டத்தில் மின் கழிவுகளை எரித்தல் மற்றும் அதனை முறையின்றி பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் மின் கழிவுகளை எரித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, 5 ஆண்டுகள் சிறை தண்டனை போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மின்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்கள் மட்டுமே மின்கழிவுகளை சேகரித்து செயலாக்க முடியும்.

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.

மின்னணு கழிவு மேலாண்மை விதிகளின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின் கழிவு பொருட்களை சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர்கள் அல்லது மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும். முறைசாரா வர்த்தகம், அறிவியல் பூர்வமற்ற செயலாக்கம், மின் கழிவுகளை எரித்தல் போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல், எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மின்னணு கழிவு மேலாண்மை விதிகளின்படி இவ்விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுபோர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

எனவே, இவ்வகையான செயல்களில் ஈடுபடும் மின்கழிவு கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி அந்நிறுவனத்தை மூடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும், அச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். மேலும் பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின்கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தைத் தவிர்க்குமாறும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்குப்பிறகு செயல்பட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொதுமக்கள் சட்டவிரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தை தடுக்கும்பொருட்டு மின்கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Villupuram