ஹோம் /விழுப்புரம் /

தீபாவளி... விழுப்புரம் மக்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

தீபாவளி... விழுப்புரம் மக்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Villupuram | விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகை மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

அதே வேளையில் பட்டாசு வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், வயதான பெரியவர்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

Must Read : உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

எனவே, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே திறந்தவெளியில் ஒன்றுகூடி அரசு நிர்ணயித்த நேரங்களில் வெடிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே பொதுமக்கள் பட்டாசுகளை கவனமாகவும், விபத்தில்லாமலும் வெடித்து விபத்தில்லா தீபாவளியாககொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Deepavali, Diwali, Local News, Villupuram