ஹோம் /விழுப்புரம் /

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு - விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு - விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தேர்வு - மாதிரிப்படம்

தேர்வு - மாதிரிப்படம்

Viluppuram District | விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்பும் நோக்கில், இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 4ஆம் தேதி முற்பகல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மையங்களில் நடைபெற இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை www.cra.tn.gov.in, www.tn.gov.in, www.viluppuram.nic.in ஆகிய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Must Read : கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் திரைப்பட லிஸ்ட்!

மேலும் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் வரும் லிங்க்-ஐ பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Exam, Local News, Villupuram