திருவெண்ணெய்நல்லூர் அருகே கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை தட்டிக்கேட்டி மனைவி மீது கொதிக்கும் குழம்பினை ஊற்றிய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய்நல்லூர் அருகேயுள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் ஆரோக்கியசாமி மற்றும் அவரது மனைவி பெரியநாயகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கணவருக்கு அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது பெரியநாயகிக்கு தெரியவரவே இருவருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கள்ளத்தொடர்பு குறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் பெரியநாயகி புகார் அளித்தபோது கணவன் மனைவிக்குள் சமாதானமாக போகும் படி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் கணவர் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இதனை அறிந்த பெரியநாயகி இது குறித்து கணவரிடம் கேட்டபோது இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் கணவர் ஆரோக்கியசாமி, அடுப்பில் கொதித்து கொண்டிருந்த குழம்பினை எடுத்து மனைவியின் மீது ஊற்றியுள்ளார். இதில் துடிதுடித்து போன பெரியநாயகி வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் பெரியநாயகியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து பெரியநாயகி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: குணாநிதி ஆனந்தன், விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Husband Wife, Illegal affair, Viluppuram S22p13