Home /viluppuram /

Villupuram : எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்க.. விரும்பிய காசு மட்டும் கொடுங்க.. இளைஞரின் ‘மனிதநேய’ உணவகம்..

Villupuram : எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்க.. விரும்பிய காசு மட்டும் கொடுங்க.. இளைஞரின் ‘மனிதநேய’ உணவகம்..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District : விழுப்புரம் மாவட்டம் தென்கோடிப்பாக்கம்  பகுதியைச் சேர்ந்த பூவரசன் (வயது 24)   "மனிதநேயம்" என்ற பெயரில் உணவகம்  ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு சாப்பிட்டுவிட்டு விரும்பிய பணத்தை அளித்து செல்லலாம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்கோடிப்பாக்கம் பகுதியில் திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், பூவரசன் என்ற இளைஞர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். காசு இல்லனாலும் பரவாயில்லை நீங்க சாப்பிடலாம் என்ற நோக்கத்தில் இந்த உணவகத்தை அவர் நடத்தி வருகிறார். .

தென்கோடிப்பாக்கம்  பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் பூவரசன் ( வயது 24) . இவர்  "மனிதநேயம்" என்ற பெயரில் உணவகம்  ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கடையில் வைத்துள்ள பதாகையில் “அன்பை பரிமாறுவோம்” எனவும், உணவின் விலை உங்கள் விருப்பம் என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளார்.

காலையில் தினமும் இட்லி மற்றும் பொங்கலும்,மதிய நேரத்தில் லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என மூன்று வகையான உணவு வழங்கி வருகிறார். இங்கு அதிகாலையில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் வந்து உணவு சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.

பூவரசனின் மனிதநேய உணவகத்தில் உள்ள உணவு வகைகள்


"உணவின் விலை உங்கள் விருப்பம்" என்பதால் சாப்பிட்டு முடித்தவுடன் அருகில் வைத்துள்ள ஒரு பெட்டியில், இந்த உணவகத்திற்கு வருபவர்கள் அவர்களால் முடிந்த தொகையை அதில் செலுத்தி விட்டு செல்கின்றனர். இந்த தொகையை மறு நாளின் உணவுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பூவரசன் பயன்படுத்தி வருகிறார்

இதுபற்றி பூவரசன் கூறுகையில்,  “நான் தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளேன். கொரோனா காலகட்டத்தில் பலரும் உணவின்றி தவித்து வந்தனர். நானும் பல நேரங்களில் உணவின்றி தவித்து இருந்தேன்.

பூவரசன்..


ஆகையினால்,இதுபோன்ற சூழ்நிலை யாருக்கும் வரக் கூடாது எனவும் “பசி இல்லா தமிழகம்” உருவாக்க வேண்டும் என நினைத்தேன். இதன் தொடர்ச்சியாக, இப்பணியில் ஈடுபட்டு உள்ளேன். தினமும் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து நானும் என் அம்மாவும் சேர்ந்து காலை உணவாக இட்லி மற்றும் பொங்கல் போன்றவற்றை தயார் செய்து 7:30 மணி அளவில் கடையில் வைத்து விடுவோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்,பெரியவர்கள் என அனைவரும் உணவு அருந்திவிட்டு தங்களால் இயன்ற பணத்தை இங்கு உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்வார்கள்.

பூவரசனின் உணவகத்தில் பசியாறும் ஒருவர்..


மேலும் மதிய வேளையில் தயிர் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் என மூன்று வகையான உணவை மதிய வேளையில் வழங்கி வருகிறார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 2,000  ரூபாய் வரை உணவுக்காக செலவாகுதாகவும் தெரிவித்த பூவரசன் உணவக வேலை முடிந்த பிறகு இரவு நேரத்தில் பகுதி நேர வேலைக்கு சென்று வருவதாகவும் தெரிவித்தார்.

திண்டிவனத்திலிருந்து பூவரசனின் மனிதநேய உணவகம் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..

Tindivanam

முடிந்தளவுக்கு என்னால் முயன்ற வரை அனைவருக்கும் இலவசமாக உணவு அளிப்பேன், மற்றவர்களும் உங்களால் முடிந்தவரை அனைவருக்கும் அன்பையும், உணவையும் பரிமாறுங்கள் எனவும், தற்போது கூட பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலரும் உணவுக்காக கையேந்தும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றவே என்னால் முயன்ற ஒரு சிறிய முயற்சியாக இதனை முன்னெடுத்து நடத்தி வருகிறேன் என பெருமையுடன் தெரிவித்தார் பூவரசன்.

பூவரசனின் இத்தகைய செயல் அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பூவரசனை பாராட்ட விரும்பினால் 9585798079 என்ற எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி