ஹோம் /விழுப்புரம் /

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது எப்படி? - விழுப்புரத்தில் நடைபெற்ற மென்பொருள் கண்காட்சி

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது எப்படி? - விழுப்புரத்தில் நடைபெற்ற மென்பொருள் கண்காட்சி

மென்பொருள்

மென்பொருள் கண்காட்சி

Viluppuram | விழுப்புரம் அரசுப் பள்ளியில் மென்பொருள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

தொழில்நுட்பத்தைப் பற்றிய முழுமையான புரிதலை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் நோக்கில், தன்னார்வலர்களால் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மென்பொருள் கண்காட்சி நடத்தப்பட்டது.

அறிவியல் கண்காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கும் நமக்கு மென்பொருள் கண்காட்சி என்பது புதிதாக தான் இருக்கும். கல்லூரி அளவில் நடக்கும் இது போன்ற ஒரு கண்காட்சியை பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எளிய தமிழில் புரியும்படி நடத்தியிருக்கின்றனர் விழுப்புரத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் குழுவினர்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இக்கண்காட்சியில் புதிய மென்பொருட்கள் பற்றியும், அவை குறித்த விரிவான தகவல்களையும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டது.

மென்பொருள் பற்றித் தெரிந்துகொள்ளும் மாணவர்கள்

VGLUG (Viluppuram GNU/Linux Users Group) என்ற அமைப்பினர் இந்த கண்காட்சியை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றனர்.

இக் கண்காட்சி நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து இக்குழுவை சேர்ந்த கார்க்கியிடம் பேசினோம்.

மென்பொருள் பற்றித் தெரிந்துகொள்ளும் மாணவர்கள்

இதுகுறித்து பேசிய அவர், ‘தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்கள் குழுவில் உள்ளவர்கள் வேலை நேரம் போக, ஓய்வு நேரம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் இந்த அமைப்புக்காக நேரத்தை செலவிடுகிறோம். தொழில்நுட்பத்தைப் பற்றி கிராமப்புறங்களில் உள்ளவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

தொழில்நுட்பம் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை நிச்சயமாக கிடைக்கும். கல்வி இல்லாத இடத்தில் தொழில்நுட்பம் மூலம் மோசடிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதனை குறைப்பதற்காகவும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டுவது, கல்விக்காக எப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புக்கு தயாராகுவது போன்ற அனைத்து விஷயங்களையும் கற்றுத் தருகிறோம்’ என்றார்.

விழுப்புரம்வாசிகளுக்கு பயனுள்ள இந்த கண்காட்சியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப அறிவை மெருகேற்றிக்கொண்டனர். பங்கேற்ற பலரும் இது போன்ற கண்காட்சி மக்களுக்கு உண்மையில் நல்ல பயனை அளிக்கும் எனவும் எளிய முறையில் தொழில்நுட்பங்களை புரிய வைத்தனர் எனவும் கூறினர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13