ஹோம் /விழுப்புரம் /

மின் கட்டணம் குறைய வேணுமா..! அப்போ இதை பாலோ பண்ணுங்க - விழுப்புரம் கலெக்டர் சொன்ன அட்வைஸ்..

மின் கட்டணம் குறைய வேணுமா..! அப்போ இதை பாலோ பண்ணுங்க - விழுப்புரம் கலெக்டர் சொன்ன அட்வைஸ்..

X
விழுப்புரம்

விழுப்புரம்

தேசிய மின் சிக்கன வார விழாவினை முன்னிட்டு,மின் பணியாளர்கள் அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணியை விழுப்புரத்தில் நடந்தது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

தேசிய மின் சிக்கன வார விழாவினை முன்னிட்டு,மின் பணியாளர்கள் அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் சார்பில், மின் பணியாளர்கள் அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மின் சிக்கன வாரம் குறித்து மாவட்ட ஆட்சியர்  மோகன் தெரிவிக்கையில், ”தேசிய மின் சிக்கன வார விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் மின் சிக்கனம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காகவும் மின்னழுத்தம் மற்றும் மின்பற்றாக்குறையின்றி அனைவருக்கும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக தேசிய மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மின் சிக்கனம் கலெக்டர் சொன்ன டிப்ஸ்.

பொதுமக்கள் மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் விதமாக ஆளில்லாத அறையில் ஒடும் மின் விசிறி, ஒளிரும் மின் விளக்கு, நிரம்பிய பின்னும் நிறுத்த மறந்த நீரேற்றும் இயந்திரம் , யாருமே பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டி, நீண்ட நேரம் வேலையில்லாமல் இயக்க வைக்கப்பட்டிருக்கும் கணினி சூடான பின்னும் அணைக்கப்படாத நீர் சூடேற்றும் கருவி கதவை மூடி விட்டு அனைக்க மறந்த கழிவறை மின் விளக்கு ஆகியவற்றை அணைக்க மறப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
ஏ.சி-யை ஓடவிட்டு சன்னலையும், கதவையும் மூடமறப்பது,ஏ.சி-யை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆப் செய்துவிட்டு சுவிட்சை அணைக்காமல் ஸ்டெபிலைசரை பல மணிநேரம் இயக்கத்தில் வைப்பது, வெளியில் செல்லும் முன்னர் மின் விசிறி, மின் விளக்கு, ஏ.சி ஆகியவற்றை அணைக்க மறப்பது போன்ற செயல்களை தவிர்ப்பதன் மூலம் மின்சாரத்தை நாம் சேமிக்க முடியும்.
மேலும் மின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான எர்த் பைப் போடுவதுடன் அதை குழந்தைகள் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து பராமரிக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற நட்சத்திர குறியிட்ட மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்துதல்,மூன்று பின் சாக்கெட்கள் மற்றும் மின் விளக்குகளையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள் பழுதுபட்ட ஒயர்கள், மின்சாதனங்கள் பயன்பாட்டில் இருப்பின் அவற்றை தாமதமின்றி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். குளியலறையிலும் கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக்கூடாது. சுவிட்சுகுகள் பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
இவற்றினை முறையாக கடைபிடிப்பதன் மூலம் மின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் மின்சாரம் தொடர்பான சாதனங்களை முறையாக கையாளுவதன் மூலம் நம்மை பாதுகாத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் மின் சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலமும் தங்களுடைய பொருட்செலவு குறைவதுடன் நாட்டிற்கும் பேரூதவியாக அமைந்திடும்” என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.
First published:

Tags: Electricity, Electricity bill, Local News, Tamil News, Villupuram