ஹோம் /விழுப்புரம் /

பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது?- விளக்கும் தீயணைப்புத்துறையினர்

பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது?- விளக்கும் தீயணைப்புத்துறையினர்

தீயணைப்புத்துறையினர்

தீயணைப்புத்துறையினர்

Villupuram Fire and Rescue Department | தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவின் போது விபத்து ஏற்பட்டால் அது எப்படி தடுப்பது குறித்த செயல்முறை விளக்கத்தையும்,  விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு பேரணியும் நடத்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளியின் போது தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி தடுப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கத்தையும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர்.

தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொது மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்துகள் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கும் விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவதற்கு தீயணைப்பு துறையினர் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க:  ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

அந்த வகையில் விழுப்புரத்தில்   தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, விழுப்புரம் மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி, உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர் மேற்பார்வையில், மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், செஞ்சி, மரக்காணம்,வானூர்,மேல்மலையனூர், திருவெண்ணைநல்லூர்,விக்கிரவாண்டி ஆகிய 8 நிலையங்களிலும், அந்தந்த நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 17.10.22 முதல் ஒரு வார காலத்திற்கு காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தீபாவளியின் போது எவ்வாறு பாதுகாப்பாக, பட்டாசு வெடிப்பது, தீக்காயம் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்வது, தீ விபத்து எவ்வாறு தவிர்ப்பது மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது என்ற கருத்தின் அடிப்படையில் பள்ளி கல்லூரி மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கியும், விழுப்புரம் பேரணியும் மற்றும் செயல் விளக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:  அடடே... வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டதா! -  விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

இதன் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவர்கள் தீபாவளி குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படியும் விழிப்புணர்வு பேரணி ஆக சென்றனர்.

அதன்பின் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு வீரர்கள், பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி தடுக்க வேண்டும் என்பது குறித்த பல செயல் முறைகளை செய்து காட்டினர். பட்டாசு வெடித்து திடீரென தீப்பற்றினால் அதில் மண்ணை கொட்டியும், அல்லது அருகில் உள்ள தண்ணீர் ஊற்றியும், ஈரமான சாக்கு அல்லது போர்வை கொண்டும் அணைக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்பின் இந்த செயல்முறையை பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் செய்து பார்த்தனர். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram