முகப்பு /விழுப்புரம் /

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

மாதிரி படம்

மாதிரி படம்

Viluppuram News : ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி வங்கி கணக்கை தொடங்குவது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Viluppuram, India

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி வங்கி கணக்கை தொடங்குவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் ஏதேனும் ஒரு உறுப்பினரின் ஆதார் எண், வங்கிக் கணக்கில் இணைக்கப்படாமல் உள்ள வற்றின் பட்டியல், அஞ்சலக துறையில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கு ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களின் விவரம் இந்தியாபோஸ்ட் பேமண்ட் வங்கியிடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ஊர்களில் செயல்படும் அஞ்சலக வங்கியை அணுகி, தங்கள் குடும்ப அட்டையின் விவரம் இடம்பெற்று இருப்பின் ரூ.200/- செலுத்தி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய வங்கிக் கணக்கை துவக்கிடலாம்” என

மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Local News, Villupuram