விழுப்புரம் மாவட்டத்தில் 11.60 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வை அதிகரிக்க வேண்டி தமிழ்நாடு பசுமை திட்டம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக, தமிழ்நாட்டின் பசுமை போர்வையை 23.76% இருந்து 33 சதவீதமாக உயர்த்துதல் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 11.60% ஆக உள்ள பசுமைப் போர்வையை அதிகரிக்க வேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு பசுமை திட்டம் (GTM) மற்றும் நபார்டு ( NABARD) திட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை வன விரிவாக்க மையத்திலும், விழுப்புரம் மாவட்ட மத்திய நாற்றங்காலிலும் தேக்கு, ஈட்டி, செம்மரம், சந்தனம், மலைவேம்பு, பலா, மகாகனி, வேங்கை, புளி, நாவல், புங்கன், வேம்பு, பாதாம், இலுப்பை, நெல்லி, கருமருது, பூவரசு, மற்றும் நீர் மருது போன்ற நான்கு லட்சம் மரக்கன்று உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : இந்த குளத்தில் குளித்தால் நோய்கள் தீருமாம்... கிராம மக்களின் நம்பிக்கை...
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்
தமிழ்நாட்டின் பசுமை போர்வையை 23.76% இருந்து 33 % ஆக உயர்த்துதல், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நிலைத்த நிலையான வருமானத்தை தரவேண்டும் என்பதற்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக மரக்கன்றுகளை பெறுவதற்கு, பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களின் தேவைக்கு ஏற்ப மரக்கன்றுகளை வாங்க நினைப்பவர்கள், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரின் விருப்பமனு, தீர்மான நகல் மற்றும் தொடர்புடைய துறையின் தடையில்லா சான்று (NOC), கிராம நிர்வாக அலுவலரின் சான்று மற்றும் FMB வரைபடம் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து செடிகளை வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : குறைந்த செலவில் அதிக லாபம் கொடுக்கும் பந்தல் காய்கள்.. விளக்கும் விழுப்புரம் விவசாயி!
பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களின் வேண்டுகோள் கடிதம் தேவை.
விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் விவசாயிகளின் விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலரின் சான்று மற்றும் FMB வரைபடம் போன்ற ஆவணங்கள் தேவை. எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை, வனத்துறையை அணுகி தங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் வனத்துறையிடமிருந்து இலவசமாக மரக்கன்றுகள் வாங்கிக் கொள்ளும் திட்டம் குறித்த ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட வந்த விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தரும், பள்ளி மாணவ மாணவியருக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்த திட்டம் பற்றி நம்மிடம் தெரிவிக்கையில், பொதுமக்கள் விவசாயிகள் இலவசமாக தேக்கு, புங்கன், மலைவேம்பு, நீர் மருது போன்ற பல்வேறு மரக்கன்றுகள் இலவசமாக வாங்குவதற்கு இத்திட்டம் மிகப் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு, வாங்க விருப்பமுள்ளவர்கள் இந்த ஸ்டால்க்கு வருகை புரிந்து தங்களுக்கு தேவையான விளக்கங்களை கேட்டறிந்து விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். இது தொடர்பாக இரண்டு நர்சரிகள் செயல்பட்டு வருகிறது. ஒன்று அடுக்கத்திலும் இன்றொன்று உளுந்தூர்பேட்டை வன விரிவாக்க மையத்திலும் உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், இந்த வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 25 லட்சம் மரகன்றுகளை உருவாக்க திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது அதில் வனத்துறை சார்பாக 10 லட்சம் மரக்கன்றுகள் உருவாக்கும் திட்டம் தயாராகி வருகிறது என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram