Home /viluppuram /

டெரகோட்டா ஜூவல்லரியில் இவ்வளவு வருமானமா? வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வழிகாட்டும் தன்னார்வலர்..

டெரகோட்டா ஜூவல்லரியில் இவ்வளவு வருமானமா? வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வழிகாட்டும் தன்னார்வலர்..

டெரகோட்டா

டெரகோட்டா ஜூவல்லரி

Villupuram District: விழுப்புரம் அடுத்த தென்னைமாதேவி பகுதியில் டெராகோட்டாவில்  இருந்து கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை பெரிய அளவில் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் இடவசதி செய்து தர வேண்டுமென அதில் ஈடுபட்டுள்ள குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  தங்க நகைகள் போன்று ஃபேஷன் ஜுவல்லரிக்கும் அதிக மவுசு உள்ளது. ஆடைகளுக்கு ஏற்ப எந்த வடிவில் வேண்டுமானாலும் வடிவமைத்து நாம் அணிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் எளிமையான முறையில், வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல லாபத்தை கொடுக்கிறது. தற்போது டெரகோட்டா ஜுவல்லரி செய்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  அந்த வகையில், விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி பகுதியில் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் "வாழ்ந்து காட்டுவோம் இயக்கம் மூலம் சமுதாய திறன் பள்ளி மூலம் இலவசமாக சுய தொழில் மேற்கோள்வது கைவினைப் பொருட்கள் செய்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு குழுவுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவதுடன் அதற்குரிய பயிற்சி மற்றும் கருவிகள்  இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்கத்திலான இத்திட்டத்தினை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த சமுதாய திறன் பள்ளி மூலம் தென்னமாதேவி பகுதியில் அதிகளவில் பெண்கள் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

  மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சியாளராக திகழும் சபரிநாதன் (வயது 35) என்ற இளைஞர், தான் கற்ற கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மண்பாண்ட பொருட்கள் செய்வது, கைவினைப் பொருட்கள் செய்வது, வீட்டு அலங்கார பொருட்கள் செய்வது போன்ற பயிற்சிகளை தன் கிராமத்தில் கலையின் மீது ஆர்வம் கொண்ட வர்களுக்கு கற்று தர முயன்றார்.

  டெரகோட்டா ஜூவல்லரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள்..


  இதனையடுத்து அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட  ‘சமூக பயிற்சிப்பள்ளி’ மூலம் இப்பயிற்சி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி மூலம் கிராமத்திலுள்ள அனைத்து பெண்மணிகளும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  மேலும் படிக்க:  கழிவுகளிலிருந்து பயோகேஸ் உற்பத்தி.. அசத்தும் பட்டதாரி இளைஞர்..

  மேலும்  ‘சமுதாய பள்ளி’ பற்றி சபரிநாதன் கூறுகையில், நான் ஒன்பதாம் வகுப்பு தான் படித்து முடித்துள்ளேன் எனக்கு சிறு வயது முதலே கைவினைப் பொருட்கள் செய்வதில் அதிக அளவில் ஆர்வம் இருந்தது.அதன்பின், இந்திய ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று, அதற்குரிய மானியம் வாங்கி ஒரு சுயதொழிலை தொடங்கினேன். இதில் கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதன் பின்பு, அரசாங்க திட்டம் அறிந்து அதில் பயிற்றுநராக பயிற்சி பெற ஆரம்பித்தேன்.

  மேலும் இந்த பயிற்சி மூலம் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கும் பயிற்சி அளித்தேன். தற்போது 40 முதல் 50 பெண்கள் இத்திட்டத்தில் இணைந்து, பயின்று பலவகையான கைவினைப் பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

  டெரகோட்டா ஜூவல்லரி


  நாங்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அலங்கார பொருட்களை செய்கின்றோம். இந்த அலங்கார பொருட்களை குறிப்பாக டெரகோட்டா என்கிற களிமண்ணால் செய்யப்படும் அலங்கார பொருட்களுக்கு பொதுமக்களிடையே ஈர்ப்பு உள்ளது. டெரகோட்ட ஜூவல்லரி செய்வதற்கு இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.  பல வகையான வண்ணங்களில் அணியக்கூடிய ஆபரணங்கள்  இந்த களிமண்ணால் செய்யப்படுகிறது.

  மேலும் படிக்க:  உடல் பிரச்னைகளுக்கு ஏற்ப ஜூஸ்.. இயற்கை முறையிலான ஜூஸ் தயாரிப்பில் அசத்தும் விழுப்புரம் இளைஞர்..

  இந்த அலங்கார பொருட்கள் கொண்டு வீட்டில் இருந்தவாறே பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டலாம் என்ற விழிப்புணர்வை நான் ஏற்படுத்தி வருகிறேன். இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பெண்கள் பயனடையலாம்.

  மேலும் இந்த திட்டத்தை பெரிதளவில் கொண்டு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு தேவையான இடவசதி மற்றும் கருவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தால் எங்கள் கிராமத்தில் இருந்து 4 லட்சத்திற்கும் மேல் மதிப்பிலான பல்வேறு வகையான கைவினை பொருட்கள், அலங்கார பொருட்களை தமிழ்நாடு முழுவதும் எங்களால் விற்பனைக்கு அனுப்ப முடியும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சபரிநாதன் மற்றும் அவருடைய குழுவினர்.

  செய்முறை:

  டெரகோட்டா நகைகளைத் தயாரிக்க, டெரகோட்டா களிமண்ணை (பாட்டர்ஸ் களிமண்ணை) பிழிந்தெடுக்க வேண்டும். இந்த களிமண் கெட்டியாகாமல் இருக்க காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம். களிமண்ணில் தண்ணீர் அல்லது வேறு எந்த பொருளையும் சேர்க்க தேவையில்லை, இப்படி செய்தால் டெரகோட்டா களிமண் தயாராக இருக்கும். நமக்கு தேவைக்கு ஏற்ப களிமண்ணை வெவ்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் வடிவமைக்க முடியும்.

  களிமண்ணை உலர்த்துவதற்கு இரண்டு எளிய வழிகள் உள்ளன, அதாவது காற்றில் உலர்த்துதல் மற்றும் வெயிலில் உலர்த்துதலாகும். இதுதான் டெரகோட்டா நகைகள் செய்வதற்கான முறையாகும்.

  தொடர்புக்கு...

  டெரகோட்டா நகை தயாரிப்பு தொடர்பான கூடுதல் தகவல்களை பெற சபரிநாதனை 80566 71861 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.. 

  முகவரி: 

  எண்: 219/242, காளியம்மன் கோவில் தெரு, தென்மாதேவி மேடு, தி.மேட்டுப்பாளையம் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம் - 605 602

  செய்தியாளர் சு.பூஜா விழுப்புரம்
  Published by:Arun
  First published:

  Tags: Business, Villupuram

  அடுத்த செய்தி