ஹோம் /விழுப்புரம் /

மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கு மானியத்துடன் வங்கி கடன்- விண்ணப்பிப்பது எப்படி?

மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கு மானியத்துடன் வங்கி கடன்- விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள் சுய தொழில் துவங்க வங்கி கடன் பெறுவது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள் சுய தொழில் துவங்க வங்கி கடன் பெற நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிகலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

  மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் மன வளர்ச்சி குன்றியோர் (14 வயதுக்கும் மேற்பட்ட), புற உலக சிந்தனை அற்ற (18 வயதுக்கும் மேற்பட்ட) தசை சிதை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் துவங்கவுவதற்கு வழிவகை செய்ய அரசு முன்வந்துள்ளது.

  இதையொட்டி மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், சிறு, குறுந்தொழில் மானிய வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தில் அரசுடைமை வங்கிகளிலிருந்து மாற்றுத் திறனாளிகள் பெறும் வங்கிக்கடன் தொகையில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 மானியம் வழங்ப்படுகிறது.

  மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், பெற்றோா்களின் வங்கிக் கணக்கு புத்தக நகல் உள்ளிட்டவைகளுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Viluppuram S22p13