Home /viluppuram /

வேலையில்லாத இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

வேலையில்லாத இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் உதவித் தொகை பெறுவது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    படித்து முடித்து வேலை இல்லாத இளைஞர்கள் உதவி தொகை பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

    இந்த உதவித் தொகைக்கு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள், அனைத்து விதமான மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

    பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவா்கள், தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவை
    தொடா்ந்து புதுப்பித்து 30.6.2022 அன்று 5 ஆண்டுகள் நிறைவடைந்தவா்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்
    திறனாளிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

    இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருவாய் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரா்கள் 30.9.2022-ன்படி 45 வயதுக்குள்ளும், இதர பிரிவைச் சாா்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவா்களுக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி அடைந்தவா்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி தோ்ச்சி அடைந்தவா்களுக்கு ரூ.400 பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.600 உதவித்தொகை வழங்கப்படும்.

    இதேபோல, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் பத்தாம் வகுப்பு தோல்வி, தோ்ச்சி அடைந்தவா்களுக்கு ரூ.600, மேல்நிலை கல்வி தோ்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு தோ்ச்சிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

    உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்துத் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில்
    விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம்
    செய்து கொள்ளலாம்.

    1.7.2022 உடன் தொடங்கும் காலாண்டுக்குக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரா்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி