முகப்பு /விழுப்புரம் /

களிமண்ணில் கலைப் பொருள்கள்... விழுப்புரத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் இல்லத்தரசிகள்

களிமண்ணில் கலைப் பொருள்கள்... விழுப்புரத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் இல்லத்தரசிகள்

X
பயிற்சி

பயிற்சி பெறும் பெண்கள்

Viluppuram | விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மகளிர் சுய உதவி குழுவின் சார்பாக பெண்களுக்கு களிமண்ணில் கைவினைப் பொருட்கள் பயிற்சி திட்டம் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவின் சார்பாக மண்பாண்டம் கைவினைப் பொருட்கள் பயிற்சி திட்டம் நடைபெற்று வருகிறது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (முன்னர் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் - TNRTP) தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, நிதியுதவிக்கான வழிவகை செய்வது மற்றும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது போன்ற திட்டங்கள் தமிழ்நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் செயல்படுத்தபட்டு வருகிறது.

அதுபோல,விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேபனையபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவின் சார்பாக மண்பாண்டம் கைவினைப் பொருட்கள் பயிற்சி திட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சியானது 25 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியின்முடிவில் பயிற்சியில் ஈடுபட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசு தரப்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, நிதி உதவியும் வழங்கி சுய தொழில் செய்வதற்கு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வழிவகை செய்யப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை: ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால், தமிழக அரசு இதைச்செய்யவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 மேலும் இதுகுறித்து இதில் ஈடுபட்ட உறுப்பினர்கள் தெரிவிக்கையில் இது போன்றபயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் எங்களுக்கு தேவையான வருமானம் ஈட்ட முடியும் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13