திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நேற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது திமுக தலைமை கழகத்தின் மூலமாக புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்து படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடியிடம் வழங்கி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அந்த படிவத்தை அவர் மீதே தூக்கி எரிந்து ஆவேசமாக பேசினார். இதனால் நிர்வாகிகள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் பரபரப்பு நிலவியது.
மேலும், புதிதாக மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என கூறிவிட்டு திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் பகுதியில் நீர் மோர் பந்தலை திறந்து விட்டு அமைச்சர் பொன்முடி அங்கிருந்து சென்றார். இதனால் நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Ponmudi, Villupuram